திடீரென எதிர்பாராதவிதமாக ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி வானத்தை நோக்கி இழுக்கப்பட்டு மேலே பறந்த சிறுமியை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உலகத்தில் உள்ள பல நாடுகளில் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதுபோன்று தற்போது சில நாடுகளில் பட்டம் விடும் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பட்டம் என்றால் சிறிய வகை பட்டமாக இல்லாமல் பல்வேறு வகையான உருவங்கள் கொண்ட ராட்ச பட்டங்களை பறக்க விடுவார்கள். இதை ஒரு திருவிழா போன்று கொண்டாடுவார்கள். அந்த வகையில், தைவான் நாட்டில் நானிலியோ பகுதியில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, பட்டமிடும் விழாவை தனது பெற்றோருடன் பார்க்க வந்த 3 வயது சிறுமி கூட்டத்தின் நடுவே நின்று அதை ரசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென எதிர்பாராதவிதமாக ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி வானத்தை நோக்கி இழுக்கப்பட்டு மேலே பறந்தார். சில மீட்டர்கள் உயரே சென்றதும் பட்டத்துடன் சிறுமி இருப்பதை கீழே உள்ளவர்கள் பார்த்து, சிறிது நேரத்தில் நடந்த நெஞ்சை பதபதைக்கும் சம்பவத்தின் ஆபத்தை உணர்ந்து சிலர் பட்டத்தை லாபகரமாக கீழே இறக்கி அந்த சிறுமியை காப்பற்றினர். பின்னர் சிறுமிக்கு, மனதளவில் பதட்டமும், பயமும் இருந்ததாகவும், உடலில் சிறு காயங்கள் கூட ஏற்படாமல் காப்பாற்றப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Terrifying moment a child at a kite festival in Hsinchu, northern Taiwan gets tangled up in a kite and lifted fifty feet up into the air. pic.twitter.com/YAPL545yAn— Mike Fagan (@MikeFaganTaiwan) August 30, 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக