தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றுடன் 7-வது கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது. இதையடுத்து, நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்து சேவை நாளை முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் இயங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயங்க அனுமதி கொடுக்கவேண்டும். மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்றும் 50 % க்கு பதில் 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்தால்தான் தனியார் பேருந்து இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் தர்மராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக