Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

வேகமும், நிர்வாகத்திறமையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!!
நடைமுறையில் ராகுவானவர் சிம்ம ராசிக்கு பதினொன்றாம் இடத்திலும், கேதுவானவர் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றார். இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் சிம்ம ராசிக்கு போக சுகத்திற்கு அதிபதியான ராகுவானவர் பத்தாம் இடத்திலும், ஞானத்திற்கு உரியவரான கேது நான்காம் இடத்திலும் பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.

பலதரப்பட்ட செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். செய்யும் காரியங்களில் சற்று நிதானத்துடன் செயல்படும்போது தேவையற்ற அவப்பெயரை தவிர்க்க இயலும். கட்டுரை, இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சமுதாயத்தின் மீது புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மூலம் சில செயல்களில் காலதாமதம் உண்டாகும். வெளிநாட்டு பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். கமிஷன் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயமும், அறிமுகமும் கிடைக்க பெறுவீர்கள். துறைகள் சம்பந்தமான அனுபவமும், திறமையும் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மரம், மூங்கில் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
பெண்களுக்கு :

பெண்கள் சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை துணைவரின் உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய மனை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சலுக்கு பின் அனுகூலம் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மதிப்பையும், பாராட்டையும் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு :

மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொண்டு நேரத்திற்கு உறங்குவது மந்தத்தன்மையை குறைக்கும். உயர்கல்வியில் ஏற்பட்டிருந்த சில தடைகள் நீங்கி மேன்மை அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்லும்போது கோப்புகளில் கவனம் வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் மாற்றங்களும், முன்னேற்றமும் கிடைக்க பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்துக்களை பரிமாற்றம் செய்வதன் மூலம் அவ்வப்போது சில அவப்பெயர்கள் ஏற்பட்டு மறையும். எதிர்பாலின மக்களின் செயல்பாடுகளில் தலையிடுவதற்கு முன் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்களின் மூலம் உடல்சோர்வும், அலைச்சலும் ஏற்படும். ஆகவே, நேரத்திற்கு தகுந்தாற்போல உணவுகளை உண்பது ஆரோக்கிய பிரச்சனைகளை குறைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். எந்தவொரு செயலிலும் நேர்மையை கடைபிடிப்பதன் மூலம் மேன்மையும், கீர்த்தியும் அடைவீர்கள். கட்சி தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் மூலம் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். அரசியல் தொடர்பான பல நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான காலக்கட்டங்கள் அமையும். ஆசைகளை குறைத்து கொண்டு நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
வியாபாரிகளுக்கு :

வியாபாரிகள் தொழில் சார்ந்த முயற்சிகளில் அதிக முதலீடுகளை குறைத்து கொள்ள வேண்டும். வேலையாட்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். திட்டமிட்ட சில காரியங்களில் எதிர்பாராத மாற்றங்களும், காலதாமதமும் நேரிட்டாலும் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கை துணைவரின் உதவிகள் மற்றும் ஆலோசனைகளின் மூலம் தெளிவுகள் கிடைக்க பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு :

விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பயிர் விளைச்சலின்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பாசன வசதி தன்மைக்கு ஏற்ப பயிர்களை நிர்ணயம் செய்துகொள்வது விளைச்சலை மேம்படுத்தும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்க பெறுவீர்கள். ரசாயன உரங்களை காட்டிலும் இயற்கையான உரங்கள் மூலம் லாபமும், ஆதாயமும் கிடைக்க பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் வெளியூர் பயணங்கள் கிடைக்க பெறுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப திறமைகளில் புதுவிதமான மாற்றங்களையும், யுக்திகளையும் பயன்படுத்துவீர்கள். மூத்த கலைஞர்கள் மற்றும் நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
வழிபாடு :

செவ்வாய்க்கிழமைதோறும் நாக தேவர்களை வழிபாடு செய்து வர ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே..!!
அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக