பெங்களூருவைச் சேர்ந்த நபர் மோசடி நபர்களிடம் வங்கிக் கணக்கைக் கொடுத்து ஒரு
லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
பெங்களூரு அரகெரே அருகே வசித்து வருபவர் நாகபூஷண். இவர் தனது நண்பர் ஒருவருக்கு கூகுள் பே செயலி மூலமாக 300 ரூபாய் அனுப்பியுள்ளார். இதனால் அவர் இணையத்தில் இருந்து கூகுள் பே வாடிக்கையாளர் சேவை மைய நம்பரை எடுத்து போன் செய்து தனது புகாரைக் கூறியுள்ளார்.
எதிர்முனையில் பேசிய அந்த நபர் நாகபூஷணிடம் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பும்படி கூறி தெரிவித்துள்ளார். இவரும் நம்பி அனைத்து விவரங்களையும் அவர் சொல்லிய நம்பருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் நாகபூஷனுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்பே ஆன்லைன் போர்ஜரி கும்பலிடம் தன் பணத்தை இழந்ததை அறிந்து சைபர் கிரைம் போலிஸாரிடம் புகாரளித்துள்ளார். அவர்கள் இது சம்மந்தமாக அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக