Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 ஆகஸ்ட், 2020

செப்டம்பரில் திறக்கப்படுமா பள்ளிகள்? வரவுள்ளது மிகப்பெரிய அறிவிப்பு!!

செப்டம்பரில் திறக்கப்படுமா பள்ளிகள்? வரவுள்ளது மிகப்பெரிய அறிவிப்பு!!
கொரோனா வைரஸ் (Corona Virus)  தொற்று தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு, பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை தொடர்கிறது. இது பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் பள்ளிகள் என அனைத்து தரப்பினருக்கும் இருக்கும் மிகப் பெரிய கேள்வியாகும்.
ஆகஸ்ட் மாதத்தில், 9 நாட்களில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் ஆகிவிட்டது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்திலிருந்து பள்ளிகளை மீண்டும் திறக்கும் (Schools Reopening) திட்டத்தை மத்திய அரசு விவாதித்து வருகிறது.
செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் உயர் வகுப்புகளுக்கான பள்ளிகள் கட்டம் கட்டமாக தொடங்கப்படலாம் என்பது அரசாங்கத்தின் கருத்தாகும்.
சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் (Dr. Harshvardhan) தலைமையிலான கோவிட் -19 க்கான GOM-ல், முதலில் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கவும் பின்னர் 6 முதல் 9 வகுப்புகள் வரை திறப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
முதல் கட்டத்தில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கக்கூடும். ஒரு வகுப்பில் நான்கு பிரிவுகள், அதாவது Section-கள் இருந்தால், ஒரு நாள் இரண்டு Section-கள் என்ற முறையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுவார்கள்.
பள்ளியின் நேரம் பாதியாக குறைக்கப்படும். அதாவது 5 முதல் 6 மணி நேரம், 2 முதல் 3 மணி நேரமாக வாய்ப்புண்டு.
பள்ளிகள் ஷிப்டுகளில் தொடர்ந்து இயங்கும் அதே வேளையில், பள்ளி வளாகங்கள் சுத்திகரிக்கப்படுவதற்கு இடையில் ஒரு மணிநேரம் வழங்கப்படும்.
பள்ளிகள் 33% ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் இயங்க முன்மொழியப்பட்டுள்ளன.
6 ஆம் வகுப்புக்கு கீழுள்ள மாணவர்கள் தற்போதைக்கு பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரலாம் என்றும் செயலாளர் குழுவின் கலந்துரையாடல்களில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ள இறுதி அன்லாக் செயல்முறையின் வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக பள்ளிகள் தொடர்பான இந்த முடிவு அறிவிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.  எனினும், இது குறித்த இறுதி முடிவை எடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படலாம்.
கடந்த வாரம் அனைத்து மாநிலங்களின் கல்விச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய கல்வி அமைச்சகம், பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதையும், பள்ளிகளில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் குறித்தும் பெற்றோரின் கருத்துகளைப் பெறுமாறு அறிவுறுத்தியது.
பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படலாம் என்பது குறித்து மாநிலங்கள் தங்கள் மதிப்பீட்டை சமர்ப்பித்துள்ளன:
• டெல்லி - ஆகஸ்ட்
• ஹரியானா - ஆகஸ்ட் 15
• ஆந்திரா - செப்டம்பர் 5 (தற்காலிகமாக)
• கர்நாடகா- செப்டம்பர் 1
• ராஜஸ்தான் - செப்டம்பர்
• கேரளா- 31 ஆகஸ்ட்
• அசாம் - செப்டம்பர் 1 (தற்காலிகமாக)
• பீகார் - ஆகஸ்ட் 15
• லடாக் - ஆகஸ்ட் 31
மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்கள் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. குறைவான கொரோனா தொற்று உள்ள பல சிறிய மாநிலங்கள் ஆகஸ்ட், செப்டம்பரில் பள்ளிகளை மீண்டும் திறக்கத் தயாராக உள்ளன. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக