Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வெறும் 35 ரூபாயில் Covid 19 மருந்து.. . சந்தையில் அறிமுகப்படுத்தி சன் பார்மா நிறுவனம்

வெறும் 35 ரூபாயில் Covid 19 மருந்து.. . சந்தையில் அறிமுகப்படுத்தி சன் பார்மா நிறுவனம்
கோவிட் 19 சிகிச்சைக்காக மலிவான மருந்து சந்தையில் அறிமுகப்பட்டு உள்ளது. முன்னணி மருந்து நிறுவனமான சன் பார்மா (Sun pharma) இண்டஸ்ட்ரீஸ், கொரோனா வைரஸ் (Coronavirus) நோயின் லேசான அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஃப்ளூகார்ட் (FluGuard) என்ற பெயரில் ஆன்டிவைரல் மருந்து ஃபேவிபிராவிரை (Favipiravir) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒரு டேப்லெட்டுக்கு ரூ .35 செலவாகும்.
இந்த வாரம் முதல் ஃப்ளூகார்ட் (FluGuard) சந்தையில் கிடைக்கும் என்று சன்பர்மா பங்குச் சந்தையில் கூறினார். இந்தியாவில் லேசான அறிகுறிகளுடன் இருக்கும் கோவிட் -19 நோய்க்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையானது ஃபாவிபிராவிர் ஆகும்.
இந்தியாவின் சன் பார்மா வர்த்தக தலைமை நிர்வாக அதிகாரி கீர்த்தி கணோர்கர் கூறுகையில், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளின் நிதிச் சுமையைக் குறைக்க ஃப்ளகார்ட்டை மலிவு விலையில் வழங்குகிறோம்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட் -19 (COVID-19) தொற்று வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், சுகாதார வல்லுநர்கள் அதிக அளவில் சிகிச்சை அளிக்கக்கூடிய முறைகளை ஏற்படுத்த வேண்டும்.
சன் பார்மா நிறுவனம் 2019-20 ஆம் ஆண்டிற்கான தனது ஆண்டு அறிக்கையில் சந்தையில் வேகமாக தனது துறையை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதாக கூறியிருந்தது. அதன் ஒருபகுதியாக ஃப்ளூகார்ட் என்ற பெயரில் ஆன்டிவைரல் மருந்து ஃபேவிபிராவிரை (Favipiravir) அறிமுகப்படுத்தியுள்ளது
இதற்காக, விநியோகத்தை வலுப்படுத்துவது, விற்பனையாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவது ஆகியவற்றை மேற்கொள்ளவதன் மூலம், மருந்து சப்ளையை தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக