ஷின்கோ ஸ்மார்ட் டிவிகளுக்கு அமேசான்
பிரைம் தின விற்பனையில் அட்டகாச தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 4கே ஸமார்ட்
டிவிகள், முழு ஹெச்டி, ஹெச்டி எல்இடி ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட பல்வேறு
பிரிவுகளில் இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பிரைம்டே விற்பனை
அமேசான் பிரைம்டே விற்பனையில் ஷின்கோ
தயாரிப்புகளுக்கு அட்டகாச தள்ளுபடிகள், இஎம்ஐ வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த
மாடல்களில் 4கே டிவிகள், முழு ஹெச்டி, ஹெச்டி எல்இடி டிவிகள் என பிரிவுகளின்
சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
மூன்று புதிய தொடர் ஸ்மார்ட்டிவிகள்
ஷின்கோ மூன்று புதிய தொடர்
ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. SO43AS (43 "FHD), SO50QBT (49"
4K) மற்றும் SO55QBT (55 "4K) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான்
வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 8 வரை அமேசான் பிரைம் தின விற்பனையை
அறிவித்துள்ளது. இதில் ஸ்மார்ட்டிவிகளுக்கு ரூ.16,699 ஆரம்ப விலையில் இருந்து
தொடங்குகின்றன.
விலை விவரங்கள்
ஷின்கோ SO43AS (43 "FHD) விலை
ரூ.16,999, SO50QBT (49" 4K) விலை ரூ.24,250 மற்றும் SO55QBT (55 "4K)
விலை ரூ.28,299 என அமேசானில் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 8 வரை விற்பனைக்கு
கிடைக்கிறது.
4 கே மாடல்கள் ஸ்மார்ட் டிவிகள்
அமேசான் பிரைம் தின விற்பனையில் 4 கே
மாடல்கள் ஸ்மார்ட் டிவிகள், முழு ஹெச்டி, ஹெச்டி டிவிகள் என அனைத்திற்கும் அதிக
தள்ளுபடியோடு இஎம்ஐ சலுகை விலையில் விற்பனைக்கு வருகிறது. ஷின்கோ 80 செ.மீ (32
இன்ச்) எச்டி ரெடி எல்இடி டிவி எஸ்ஓ 3 ஏ விலை ரூ .8,599 ஆக கிடைக்கும்.
ஷின்கோ SO43AS (43) 109cm முழு HD
ஸ்மார்ட் டிவி
ஷின்கோ ஏ ப்ளஸ் கிரேடு பேனலுடன் 1920
x 1080 குவாண்டம் லுமினிட் டெக்னாலஜி, 1.07 பில்லியன் வண்ண திரை தெளிவுத்திறனோடு
வருகிறது. அதோடு 2 யூஎஸ்பி, 1 ஜிபி ரேம் 8 ஜிபி ரோம் ஆகியவைகளோடு வருகிறது.
ஆண்ட்ராய்டு 8.0 உடன் இயங்குகிறது. இதில் 20W சரவுண்ட் பாக்ஸ் ஸ்பீக்கர்களுடன்
வருகிறது
ஷின்கோ SO50QBT (49) 124cm 4K UHD
ஸ்மார்ட் டிவி
3840 * 2160 வசதியோடு குவாண்டம்
லுமினெட் தொழில்நுட்பம், ஹெச்டிஆர் 10, 2 யூஎஸ்பி குவாட்கோர் செயலி, 2 ஜிபி ரேம்
மற்றும் 16 ஜிபி ரோம் வசதியோடு வருகிறது. இதில் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன்
வருகிறது. உள்ளமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட சிறந்த ஒலி அமைப்பு
உருவாக்குகிறது. ஆண்ட்ராய்டு 9.0-ல் இந்த ஸ்மார்ட்டிவி இயக்கப்படுகிறது.
ஷின்கோ SO55QBT (55) 140cm 4K UHD
ஸ்மார்ட் டிவி
3840 * 2160 குவாண்டம் லுமினிட்
தொழில்நுட்பம், ஹெச்டிஆர் 10, 1.07 வண்ண திரை தெளிவுத்திறனுடன் ஏ ப்ளஸ் கிரேடு, 2
யூஎஸ்பி, ஆண்ட்ராய்டு 9.0 மூலம் இயக்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப
அட்டகாச அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக