ஹைசென்ஸ் இந்தியாவில் புதிய
ஸ்மார்ட்டிவி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெச்டி, முழுஹெச்டி மற்றும் 4கே
அல்ட்ரா ஹெச்டி போன்ற அம்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்
குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி
ஹைசென்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய
ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்துகிறது. இது 32 இன்ச் ஹெச்டி ஸ்மார்ட் டிவி, 40
இன்ச் ஹெச்டி ஸ்மார்ட் டிவி மற்றும் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் என்ற அளவில்
ஸ்மார்ட் டிவிகளை 4 கே யூஹெச்டி ஸ்மார்ட்டிவிகளை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹைசென்ஸ் அறிமுகம்
ஹைசென்ஸ் தனது புதிய ஸ்மார்ட் டிவிகளை
இந்தியாவில் இன்று அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் விலை விவரங்கள்
குறித்து பார்க்கலாம். 32 இன்ச் ஸ்மார்ட் டிவி விலை ரூ.11,990 எனவும் 43 இன்ச்
ஸ்மார்ட் டிவி ரூ.20,990 எனவும் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.18,990 எனவும்
விற்கப்படுகிறது. 2020 ஆகஸ்ட் 06 முதல் அமேசான், பிளிப்கார்ட், டாடா க்ளிக்
மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவற்றில் இருந்து வாங்கமுடியும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஹெச்டி ரெசல்யூஷன் முறையான விலையில் விற்கப்படுகிறது.
32 இன்ச் ஹெச்டி ஸ்மார்ட் டிவி அம்சங்கள்
32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ஹெச்டி
டிஸ்ப்ளேவுடன் 1366 x 768 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் வருகிறது. இது க்வாட்
கோர் சிபியு பவர் 470 எம்பி ஜிபியூ பவருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 1 ஜிபி
ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அதுமட்டுமின்றி டோல்பை
ஆடியா டிடிஎஸ் சவுண்ட் அம்சங்களோடு 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 9.0 பை
ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 9.0 பை
மூலம் இயக்கப்படுகிறது. இது உள்ளமைக்கப்பட்ட க்ரோம் கேஸ்ட் ஆதரவு, கூகுள்
அசிஸ்டன்ட், ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட அட்டகாச சலுகைகள் இதில் உள்ளது.
இரண்டு யூஎஸ்பி டைப் ஏ போர்ட்கள்
கூடுதலாக இரண்டு யூஎஸ்பி டைப் ஏ
போர்ட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், எஸ்பிடிஎப் போர்ட், ஆடியோ ஜாக் ஆர்எப்
உள்ளீடு ஏவி உள்ளீடு மற்றும் இதெர்நெட் போர்ட் ஆகிய ஆதரவு இதில் உள்ளது. ஹைசென்ஸ்
ஹெச்டி, முழு ஹெச்டி, 4 கே அல்ட்ரா ஹெச்டி என மூன்று பிரிவின் அம்சங்களையும்
தனித்தனியே பார்க்கலாம்.
ஹைசென்ஸ் முழு எச்டி வரம்பு
ஹைசென்ஸ் முழு ஹெச்டி வரம்பில் 40
இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் முழு ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் 1920 x
1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
முழு ஹெச்டி ரெசல்யூஷன்
முழு ஹெச்டி ரெசல்யூஷன் அம்சத்தை
பொருத்தவரையில் க்வாட் கோர் சிபியு பவர் 470 எம்பி ஜிபியூ பவருடன் வருகிறது. இந்த
ஸ்மார்ட் டிவி 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
அதுமட்டுமின்றி டோல்பை ஆடியா டிடிஎஸ் சவுண்ட் அம்சங்களோடு 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்
உள்ளது.
ஹைசென்ஸ் 4கே யுஹெச்டி வரம்பு
ஹைசென்ஸ் 4 கே யுஹெச்டி வரம்பில் 43
இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் கொண்ட மூன்று மாடல்கள் உள்ளன. டால்பை விஷன்
எச்டிஆர் உடன் 3840 x 2160 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனோடு கூடிய 4 கே யுஎச்.டி
டிஸ்ப்ளே அம்சத்தோடு வருகிறது. அதோடு எச்டிஆர் 10 ஐ ஆதரிக்கிறது.
டைனமிக், நேச்சுரல், கேம், ஸ்போர்ட்ஸ்
கூடுதல் சிறப்பம்சங்களாக ஸ்மார்ட்
டிவிகளில் ஸ்டாண்டர்ட், டைனமிக், நேச்சுரல், கேம், ஸ்போர்ட்ஸ், சினிமா, டால்பை
விஷன் பிரைட், டால்பி விஷன் டார்க் மற்றும் பல அம்சங்கள் இதில்
இணைக்கப்பட்டுள்ளது.
குவாட் கோர் சிபியு
ஸ்மார்ட் டிவியில் 470 எம்பி
ஜிபீயுடன் குவாட் கோர் சிபியு மூலம் இயக்கப்படுகின்றன. ஸ்மார்ட்டிவி 2 ஜிபி ரேம்
மற்றும் 16 எம்பி இன்டர்னெல் ஸ்டோரேஜ் அம்சத்தோடு வருகிறது. இதில் டால்பி ஆடியோ
மற்றும் டிடிஎஸ் ஸ்டுடியோ சவுண்டிற்கான ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர் இதில்
உள்ளது.
இரண்டு யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட்கள்
இந்த ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியானது
9.0 பை மூலம் இயக்கப்படுகிறது. இது க்ரோம் கேஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டென்ட், ப்ளே
ஸ்டோர் உள்ளிட்ட பல சலுகைகளை கொண்டுள்ளது. இரண்டு யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட்கள்,
மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஒரு எஸ்.பி.டி.எஃப் போர்ட், ஒரு ஆடியோ ஜாக்
உள்ளிட்ட அம்சங்களோடு இதர்நெட் ஆதரவும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக