Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

40 வயதுக்குப் பிறகு ஆண்களும் பெண்களும் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் என்ன?


40 வயதிற்கு பிறகு நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த வயதிற்கு நம்முடைய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். எடை இழப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றம் போன்றவை உண்டாகும். எனவே 40 வயதிற்கு பிறகு உங்க உடம்பை எப்படி சிக்கென வைத்து இருக்கலாம் என்பதற்கான யோசனைகள் இதோ.

40 வயதிற்கு பிறகு நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனெனில் வயதாக வயதாக உடல் உறுப்புகள் பலவீனமாக ஆரம்பிக்கும். எனவே இந்த வயதில் நாம் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால் 40 வயதிற்கு பிறகும் கூட பெரும்பாலனோர் தங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்கிறார்கள். தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து அவர்களுக்கு கவலைப்படுவதில்லை. தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்த 40 க்கு மேற்பட்ட வயதில் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள்

ஒழுங்கற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், மோசமான தூக்கம், மருந்துகளை அதிகமாக எடுப்பது பலவற்றில் தங்கள் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.
40 வயதில் உங்க உள்ளுறுப்புகள் தொய்வடைய ஆரம்பிக்கும். சீரண உறுப்புகள் இருந்து எல்லாமே மெதுவாக ஆரம்பிக்கும்.
40 க்கு பிறகு உங்க உடல் என்னென்ன மாற்றங்களை அடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வளர்ச்சிதை மாற்றம் குறைய ஆரம்பிக்கும்

40 க்குப் பிறகு உங்க வளர்ச்சிதை மாற்றம் குறைய ஆரம்பிக்கும். வளர்ச்சிதை மாற்றம் 5% குறைந்து விடும். உங்கள் 20 மற்றும் 30 களில் நீங்கள் எடுத்துக் கொண்ட உணவை நீங்கள் இன்னும் பின்பற்றுகிறீர்கள் என்றால், நீங்கள் சிக்கலுக்கு ஆளாகுவீர்கள். நீங்கள் சாப்பிடும் உணவிலுள்ள கொழுப்பு படிவு வயிற்றில் படிந்து பிரச்சினைகளை உண்டாக்கும். செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், திசைதிருப்புதல் நோய் மற்றும் வாய்வுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

40 மற்றும் 40 க்கு மேற்பட்ட வயதில் ஆண்களும் பெண்களும் குறைவான ஹார்மோனை வெளியேற்றுகின்றனர். -ஒரு பெண்ணின் மாதாந்திர சுழற்சியைக் கட்டுப்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் முடிவடைய தொடங்குகிறது. இதனால் உங்க எடை அதிகரிக்கும்.
ஆண்களைப் பொருத்த வரை வயதாகும் போது அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய ஆரம்பிக்கும். இது எடை அதிகரிப்பு போன்ற மாற்றங்களை ஏற்படுத்தும். பின்னர், தசை வெகுஜனத்தையும், மனச்சோர்வையும், விறைப்புத்தன்மை பெறுவதில் சிக்கலை உண்டாக்கும்.

எலும்பு தேய்மானம்

எலும்பு இழப்பானது உங்க 30 வயதில் ஆரம்பிக்க ஆரம்பித்து விடும். நீங்கள் 35 வயதிற்குள் உங்கள் உடல் எலும்பு பலவீனமாகி உடைய ஆரம்பிக்கும். வலிமை மற்றும் தசைக்குறைப்பை காண்பீர்கள்.
எனவே இந்த மாதிரியான பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ளலாம். 40 வயதிற்குப் பிறகும் சிறப்பான ஆரோக்கியத்தை பெறுவது எப்படி வாங்க தெரிஞ்சுக்கலாம்

முழு தானியங்கள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு பதிலாக முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ரொட்டிகள், பாஸ்தாக்கள் தவிர்க்கப்பட வேண்டும். தினை, ஓட்ஸ் ஆகியவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் அவற்றை உட்கொள்ள வேண்டும். பழச்சாறுகளுக்கு பதிலாக பழத்தை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.


பழங்கள்

முழு பழங்களையும் சாப்பிடும் போது தான் உங்களுக்கு நார்ச்சத்து கிடைக்கும். தர்பூசணி மற்றும் பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே சுருக்கமில்லாத சருமத்திற்கு அவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். தக்காளியில் லைகோபீன் என்ற பொருள் உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது தமனி சுவர்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதய அடைப்பு போன்ற அபாயத்தை குறைக்க முடியும். இது உங்க புரோஸ்டேட்டிற்கும் நல்லது.

மஞ்சள்

மஞ்சள் ஒரு அழற்சி எதிர்ப்பு பொருள் ஆகும். இது புற்றுநோய், இதந நோய்கள் மற்றும் வயதானவர்களுக்கு வரும் அல்சீமர் நோய் வராமல் தடுக்கிறது. இஞ்சி மற்றும் பூண்டு போன்ற பொருட்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்

40 வயதாகும் போது உங்க எலும்புகளுக்கு கால்சியம் தேவைப்படுகிறது. எலும்பு இழப்பு உங்களுக்கு ஆஸ்டியோபோரஸிஸ் என்ற நோயை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் வழியாக கால்சியத்தை பெறுங்கள்.

உப்பை குறையுங்கள்

அதிகமாக உப்பு சேர்ப்பது உங்க உயர் இரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும். எனவே உணவில் உப்பை குறைத்து போட்டு சாப்பிடுங்கள். சூப்கள், ஊறுகாய், பப்பாட், பிரஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை தவிருங்கள். அதிகப்படியான உப்பு எலும்பு இழப்பிற்கும் வழிவகுக்கிறது.

நன்றாக தூங்குங்கள்

உங்க வளர்ச்சிதை மாற்றத்தை விரைவுபடுத்த ஏராளமான தூக்கத்தை பெறுவது அவசியம் ஆகிறது. எனவே வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரவில் 7 மணி நேரம் தூங்கி ஓய்வெடுங்கள். மசாலா, சூடான மிளகுத்தூள், முழு தானியங்கள், ப்ரோக்கோலி, சூப்கள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் க்ரீன் டீ ஆகியவை இதில் அடங்கும்.இவைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும்.

நெய் பயன்படுத்துங்கள்

வெண்ணெய் மற்றும் எண்ணெய்களுக்கு பதிலாக நெய் சாப்பிடுங்கள். நெய்யில் கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பதில்லை. ஆனால் எண்ணெய்யில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகளவு காணப்படுகிறது. எனவே நெய்யை அதிக வெப்பநிலையில் கூட பயன்படுத்தலாம்.

விட்டமின் சி அடங்கிய பழங்கள்

விட்டமின் சி அடங்கிய பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ளுங்கள். சிட்ரஸ் பழங்களில் ஹெஸ்பெரிடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது நம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்களுக்கு ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை தவிருங்கள்.

உடற்பயிற்சி

வயதாகும் போது நீங்கள் உடல் பருமன் கொண்டு இருந்தால் ஏகப்பட்ட நோய்களை சந்திக்க நேரிடும். வளர்ந்து வரும் வயதில் உடல் கடினமாகி, தசை வெகுஜன இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் சரியான வாழ்க்கை முறைகளை பின்பற்றி வந்தால் உங்க 80 வயதில் கூட மாரத்தான் ஓட முடியும் என்கிறது ஆய்வு.

நீர்ச்சத்துடன் இருத்தல்

உடலை நன்கு நீரேற்றம் செய்யுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
செயற்கை பானங்கள் குறைக்க ஆரம்பியுங்கள். வயதான காலத்தில் அதிகமான காஃபைன் குடிப்பது உங்களுக்கு நீரிழப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே காபி மற்றும் தேநீர் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். தேநீர் மற்றும் காபியில் இலவங்கப்பட்டை சேர்த்து குடியுங்கள். இது உங்க கலோரிகளை குறைக்க உதவுகிறது.

தியானம்

வேறொரு மொழியை கற்றுக் கொள்வது, யோகா தியானம் போன்றவற்றை செய்வது என்று மனதை வேறு வழிகளில் திசை திருப்புங்கள். இது உங்களை அல்சீமர் நோயிலிருந்து விலக்கி வைக்க உதவி செய்யும். தியானியுங்கள்

இந்த வயதில் உங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் நீங்கள் கையாளும் அன்றாட மன அழுத்தத்தை போக்க தியானியுங்கள். இது உங்க மனதிற்கு மன அமைதியை கொடுக்கும்.

மருத்துவப் பரிசோதனை

வருடாந்திர பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்
வயதாகும் போது அடிக்கடி உடற்பரிசோதனைகளை மேற்கொள்ளுவது உங்களுக்கு ஏற்படும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவியாக இருக்கும். உங்க கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளுங்கள்.

வயதாகுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நாம் பின்பற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ரகசியங்கள் மூலம் சுறுசுறுப்பாக திகழலாம். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக