Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

என்னென்ன ஜூஸ் ஆரஞ்சு பழத்தோட சேர்த்து குடிச்சா எடை வேகமா குறைக்கலாம்?



ஆரஞ்சு சாறு நமக்கு நோயெதிரிப்பு சக்தியை தருவதோடு நம் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. ஏனெனில் ஆரஞ்சு சாற்றில் பூஜ்ய கொலஸ்ட்ரால் இருப்பது நம் உடல் எடையை குறைக்க உதவி செய்யும். இது நமக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது

ஆரஞ்சு எல்லோருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்றாகும். இதன் புளிப்பு சுவையால் இதை அனைவரும் விரும்புவர். ஆரஞ்சு சாறு நமக்கு நோயெதிரிப்பு சக்தியை தருவதோடு நம் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. இது கலோரி குறைந்த மற்றும் பூஜ்ய கொழுப்பு பழமாகும்.

ஆரஞ்சு சாறு

இந்த பழச்சாறு உங்களுக்கு ஆற்றலை அளிக்கக் கூடியது. எடை குறைக்க விரும்புவோர் இந்த ஆரஞ்சு சாற்றை தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதன் அதிக நார்ச்சத்து தன்மையால் ஊட்டச்சத்து நிபுணர்கள் எடை இழப்பிற்கு இது உதவுகிறது என்கிறார்கள். ஆரஞ்சு சாற்றை கொண்டு எப்படி எடை இழப்பை பெறலாம்.
எடை இழப்புக்கு ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு சாற்றில் பூஜ்ய கொழுப்பு உள்ளது. எனவே இதை எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு கொழுப்பு கூடுமே என்ற பயம் கிடையாது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகின்றன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இதிலுள்ள விட்டமின் சி நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆரஞ்சு சாறு அழற்சி எதிர்ப்பு மற்றும் வயிறு வீக்கம் இவற்றை தடுக்கிறது. எனவே தான் நாங்கள் எடை இழப்புக்கு பிரத்யேகமான 4 விதமான ஆரஞ்சு சாற்றை உங்களுக்கு வழங்குகிறோம்.

ஆரஞ்சு மற்றும் கேரட் பழச்சாறு

இது ஒரு சிறந்த பழச்சாறு ஆகும். ஆரஞ்சு மற்றும் கேரட்டின் நிறம் சேர்வது இந்த பானத்திற்கு அழகான நிறத்தை தருவதோடு கூடுதல் சுவையையும் வழங்குகிறது. இதில் நம்ப முடியாத அளவிற்கு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன. இது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. எடை இழப்பை தருகிறது. 
ஆரஞ்சு மற்றும் இஞ்சி சாறு
ஆரஞ்சு மற்றும் இஞ்சி சேர்ந்த கலவை ஒரு வித்தியாசமான சுவையை நமக்கு வழங்குகிறது. ஏற்கனவே இஞ்சி நம் எடை இழப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு மற்றும் துளசி ஜூஸ் 
 
ஆரஞ்சு மற்றும் துளசி இலைச்சாறு நமக்கு புத்துணர்ச்சியை அளிக்க கூடியது. இது ஆற்றலை அதிகரிக்கும் பானம் மட்டுமல்லாமல் சத்தான பானமும் கூட. எனவே உங்க எடை இழப்பை இதைக் கொண்டு தொடங்கலாம். துளசி மற்றும் ஆரஞ்சு இரண்டுமே உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.
அன்னாசிபழம், ஆரஞ்சு மற்றும் சுரைக்காய் ஜூஸ்
இந்த பானத்தை தயாரிக்க அன்னாசி, ஆரஞ்சு, வெள்ளரி மற்றும் துளசி இலைகளுடன் சேர்த்து பழச்சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க உடல் எடையை குறைக்க சிறந்த வொர்க் அவுட் பானமாக இருக்கும். காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் வொர்க் அவுட் பானமாக இதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
பார்ட்டி டிரிங்ஸ்
ஆரஞ்சு சாறு, ஆப்பிள் மற்றும் மாம்பழத்துடன் எடுத்துக் கொள்ளும் போது அதன் இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் உங்களுக்கு ஒரு பார்ட்டி பானம் போன்ற சுவையை தரும். இது உங்க எடையை குறைக்க உதவி செய்யும். குளிர்காலத்தில் ஏராளமான ஆரஞ்சுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக