யுவசங்கர் ராஜா இசை அமைப்பாளர் மட்டுமன்றி ஒரு சில திரைப்
படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இருப்பினும் அவர் தயாரித்த
’மாமனிதன் திரைப்படம் பெரும் சிக்கலில் உள்ளதால் அதன் பிறகு அவர் படங்களை
தயாரிக்கவில்லை
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா ஒரு திரைப்படத்தை ஓடிடி
பிளாட்பாரத்திற்காக தயாரிக்கவுள்ளார். இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் ‘இந்தியன் 2’ படத்தில்
முக்கிய வேடத்தில் நடிக்கும் ப்ரியாபவானி சங்கர் முக்கிய கேரக்டரில் நடிக்க
உள்ளதாகவும் இந்த படத்தில் ஹீரோவே இல்லை என்றும் கூறப்படுகிறது
மேலும் ஓடிடிக்காக தயாரிக்கப்பட்டாலும் மிகப்பெரிய பட்ஜெட்டில்
தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ’ஒரு நாள் கூத்து’ என்ற படத்தை இயக்கிய நெல்சன்
இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கதை விவாதம் மற்றும்
நடிகர்கள் தேர்வு முடிந்து விட்டதாகவும் மிக விரைவில் அதிகாரபூர்வமாக இந்த படம்
குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக