கறிவேப்பிலையை தொடர்ந்து உணவில் உபயோகித்துவர சளி, கபநீர்க்கட்டு அடங்கும்.
அதில் அன்றாடம் சேர்க்கப்படும் ஒரு மூலிகையாக கறிவேப்பிலை இருக்கிறது.
கறிவேப்பிலை,
சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு, பொரித்த பெருங்காயம் சம அளவாக எடுத்து நிழலில்
உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை பொடியை நெய்விட்டு பிசைந்து
சுடுசோறுடன் கலந்து உண்ண மலச்சிக்கல், பேதி நிற்கும். குடல் பலவீனத்தால்
ஏற்படுகின்ற பேதியும் நிற்கும்.
தலைமுடி
ஆரோக்கியமாக இருப்பது அவசியம் இன்றைய காலத்தில் பலருக்கும் தலையில் பொடுகு, பேன்
தொல்லைகள் மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
இவற்றை போக்குவதற்கு அதிகம் கறிவேப்பிலையை சாப்பிடுவதாலும், கறிவேப்பிலை ஊற
வாய்த்த தேங்காய் எண்ணையை தலைக்கு தடவி வந்தாலும் தலைமுடி சம்பந்தமான
பிராச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
கறிவேப்பிலை
இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி
சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.
நீரிழிவு
ஏற்படும் சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்தாக கறிவேப்பிலை இருக்கிறது இது கசப்பு
தன்மை அதிகம் கொண்டதால் சாப்பிட்டவுடன் சீக்கிரத்திலேயே செயல்புரிந்து ரத்தத்தில்
இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவருகிறது.
தினமும்
கறிவேப்பிலைகளை பச்சையாகவோ அல்லது பக்குவம் செய்தோ சாப்பிடுவதால் கல்லீரல்
சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.
அதிகம்
காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது,
நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
ஏற்படுகிறது. இந்த மூல நோயயை விரைவில் போக்குவதிலும், அந்த மூலத்தினால் ஏற்பட்ட
புண்களை ஆற்றுவதிலும் கறிவேப்பிலை சிறப்பாக செயல்படுகிறது. எனவே மூல
பாதிப்புள்ளவர்கள் கறிவேப்பிலையை அடிக்கடி உண்ண வேண்டும்.
இதயத்திற்கு நன்மை
பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. கறிவேப்பிலையை உணவில்
அடிக்கடி சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான
நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக