>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

    இதோ நான் வந்துட்டேன் - கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4யின் அசத்தலான ப்ரோமோ.!



    இதோ நான் வந்துட்டேன். நீங்களும் வேலையை தொடங்குங்கள். நாமே தீர்வு, வேலையை ஆரம்பிக்கலாமா ? என்று கேள்வி எழுப்பிய பிக்பாஸ் சீசன் 4-யின் ப்ரோமோ வீடியோ.
    ஹிந்தி மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் புரோமோ அண்மையில் வெளியாகி அம்மொழி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தமிழ் பிக்பாஸ் சீசன் 4 எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், தமிழ் பிக்பாஸ் சீசன் 4-யின் அசத்தலான ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. அதில், மூன்று சீசன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் 4 ஆவது சீசனுக்கான ப்ரோமோவை அவரது ட்விட்டர் பக்கத்திலேயே பகிர்ந்துள்ளார்.
    அந்த ப்ரோமோ வீடியோவில், தோன்றும் கமல்ஹாசன், கொரோனா நோய் ஆபத்தானது தான், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தான், அதற்காக வீட்டிலேயே வேலையில்லாமல் இருக்க முடியாது என்றும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி பாதுகாப்பாக இருப்போம் என்று கூறியுள்ளார். இதோ நான் வந்துட்டேன். நீங்களும் உங்கள் வேலையை தொடங்குங்கள். நம்மை நம்பி இருப்பவர்களை வாழவையுங்கள், நாமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை, நாமே தீர்வு என்று கூறி, வேலையை ஆரம்பிக்கலாமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிக்பாஸ் விரைவில் என்ற அறிவிப்பும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக