நாம் தினமும் மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது ஒரு இடை உணவை சாப்பிடுவது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கடலைப்பருப்பு - ஒரு கப்
- வெங்காயம்- ஒன்று
- பூண்டு - ஒரு பல்
- இஞ்சி - சிறுதுண்டு
- பச்சை மிளகாய் - ஒன்று
- கறிவேப்பிலை - சிறிது
- சோம்பு - கால் மேசைக்கரண்டி
- உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாய் விதையை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஊறிய கடலைப்பருப்புடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல், இரண்டு சுற்று அரைத்தெடுக்க வேண்டும். பின் அத்துடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.
பின் அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, பின் பருப்பு கலவையை எலுமிச்சை அளவு உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்போது சுவையான பருப்பு போண்டா தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக