கேதுபகவான் 'ஞானக்காரகன்" என்பதால் ஜீவ சமாதியடைந்த ஏதேனும் ஒரு சித்தரின் சமாதி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துறவிகளுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் அளிப்பதும் கேது தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.
நவகிரகத்தில் உள்ள கேதுபகவானுக்கு சித்ரான்னம் எனும் உணவு அல்லது புளியோதரை சாதம் நைவேத்தியம் செய்து தானம் வழங்கினால் நன்மை கிடைக்கும்.
விநாயக பெருமான் கேது கிரக பாதிப்புகளை நீக்கக்கூடியவர். சனிக்கிழமைகளில் விநாயக பெருமானை வழிபட்டு வருவது கேது தோஷத்தை போக்கும் சிறந்த வழியாகும்.
லக்னத்திற்கு 5-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் பேச்சுத்திறமையில் வல்லவராக இருப்பார்கள்.
5ல் கேது இருந்தால் என்ன பலன்?
👉 நண்பர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
👉 கடினமான மனநிலையை கொண்டவர்கள்.
👉 அஜீரணக்கோளாறுகள் உண்டாகும்.
👉 மற்றவர்களுடன் அனுசரித்து செல்ல முடியாதவர்கள்.
👉 ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு மறையும்.
👉 பலவிதமான கலைகளை அறிந்தவர்கள்.
👉 நுணுக்கமான செயல்பாடுகளில் ஈடுபட்டு அனைவராலும் பாராட்டப்படுவார்கள்.
👉 பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.
👉 பலவிதமான மக்களுடன் தொடர்பு கொண்டவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக