Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 12 ஆகஸ்ட், 2020

புதுமையான 55-இன்ச் Transparent ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த சியோமி: விலை மற்றும் விபரங்கள்.!

போட்டி நிறுவனங்கள் திரை
சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனத்தின் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் சியோமி நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் நிறுவனங்களும் அதிநவீன டிவி மாடல்களை அறிமுகம் செய்துவருகிறன்றர்.
உதரணமாக இதன் போட்டி நிறுவனங்கள் திரை அளவை மேம்படுத்துவதில் அல்லது காட்சி தெளிவுத்திறனில் கவனம் செலுத்துகிறார்கள், பின்பு சில நிறுவனங்கள் 8கே தெளிவுத்திறன் கொண்ட டிவிகளை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சிலர் சுருட்டக்கூடிய டிவி அல்லது ஒளிபுகும் (Transparent) டிஸ்பிளே போன்ற புதுமையான நுட்பங்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.
அந்தவகையில் சியோமி நிறுவனமும் Mi TV LUX OLED ஒளிபுகும் டிவி மாடலை அறிமுகம் செய்வதின் மூலம் புதுமையான தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் வரிசையில் இணைகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி அதிகளவில் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி 55-இன்ச் Mi TV LUX OLEDசாதனம் ஆனது விவரக்குறிப்புகளை ஒரே மாதிரியாக கொண்டிருக்கிறது, ஆனால் பேனல் அளவைக் குறைக்கிறது மற்றும் ஆச்சரியப்படும் வகையில் see-through டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
புதிய 55-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அணைக்கப்படும் போது ஒரு எளிய கண்ணாடி ஸ்லாப் போல தோற்றமளிக்கும் விளிம்பில் இருந்து விளிம்பில் ஒளிபுகும் OLED டிஸ்பிளே உள்ளது. மேலும் இந்த சாதனத்தை நீங்கள் இயக்கும்போது, படம் வெறுமனே காற்றில் மிதப்பது போல் நீங்கள் உணருவீர்கள் என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது.
சுருக்கமாக இந்த டிவியின் பின்னால் கைகளை காண்பித்து, முன்பக்கத்தில் தெரிகிறதா என்று பார்க்க ஆசைப்படுவார்கள் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் மெய்நிகர் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம் சியோமி இணை நிறுவனர் லீ ஜுன் நிறுவனத்தின் 10 வது ஆண்டுவிழா நிகழ்வில் மேடையில் Mi TV LUX OLED ஒளிபுகும் பதிப்பை அதே பாணியில் டெமோவைக் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனத்தில் 93% DCI-P3 அகலமான வண்ண வரம்பு, 150000: 1 நிலையான மாறுபாடு விகிதம் மற்றும் 10-பிட் HDR ஆதரவுடன் 55 அங்குல ஒளிபுகும் OLED பேனல் இடம்பெற்றுள்ளது. பின்பு இதன் ஒளிபுகும் பேனல் 120ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. மேலும் MEMC தொழில்நுட்பத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
55-இன்ச் Mi TV LUX OLED ஆனது மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் 9650செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இது ஏஐ மாஸ்டர் இன்ஜின், டால்பி அட்மோஸ் மற்றும் டிவிக்கான MIUI ஆகியவற்றுக்கான ஆதரவோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒளிபுகும் திரையின் காட்சி அம்சங்களையும் வலிமையையும் சிறப்பாக நிரூபிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.
இந்த Mi TV LUX OLED ஒளிபுகும் பதிப்பு சீனாவில் CNY 49,999 (சுமார் ரூ.5,37,399) விலையில் கிடைக்கிறது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த சாதம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக