
ரியல்மி சி15 மற்றும் ரியல்மி சி12
ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்புகளை
தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வு வரும் ஆகஸ்ட்
18ம் தேதி, பிற்பகல் 12:30 மணிக்கு ரியல்மி நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் ட்விட்டர்,
பேஸ்புக் மற்றும் யூடியூப் வழியாக நேரலை செய்யப்படும் என்று நிறுவனம்
அறிவித்துள்ளது.
ரியல்மி சி12 மற்றும் ரியல்மி சி15
ரியல்மி சி12 பற்றிய தகவல்கள் மிகக்
குறைவாகவே அறியப்பட்டாலும், சி15 சமீபத்தில் இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டது.
ரியல்மி சி15 இன் முக்கிய சிறப்பம்சங்கள் 6,000 எம்ஏஎச் பேட்டரி, மீடியா டெக்
ஹீலியோ ஜி 35 சிப்செட் மற்றும் 6.5' இன்ச் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். குவாட் ரியர்
கேமரா அமைப்புடன் வெளியாகும் பிராண்டின் மற்றொரு ஸ்மார்ட்போன் சாதனம் இது.
மேலும் 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன்
வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். ரியல்மி சி15 இந்தோனேசியாவில் மூன்று
வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 3 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்
தோராயமாக ரூ .10,300 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி
வேரியண்ட் தோராயமாக ரூ .11,300 என்ற விலையிலும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்
தோராயமாக ரூ .12,800 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், RMX2189 மற்றும் RMX2180
என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் இந்தியத் தர
நிர்ணய பணியகம் (BIS) தரவுத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த இரண்டும் குறியீட்டு
எண்களும் ரியல்மி சி15 மற்றும் ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்களின் மாடல் எண்கள் என்று
நம்பப்படுகிறது.
ரியல்மி சி15 சிறப்பம்சம்
- 6.5' இன்ச் டிஸ்ப்ளே
- அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
- GE8320 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட்
- 4 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் + 128 ஜிபி சேமிப்பு
- மைக்ரோ எஸ்டி கார்டு சேமிப்பு
- குவாட் ரியர் கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் சென்சார்
- 8 மெகாபிக்சல் சென்சார் மூலம் அல்ட்ரா-வைட்-ஆங்கிள்
- 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்
- 2 மெகாபிக்சல் சென்சார்
- 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
- வைஃபை
- புளூடூத் வி 5.0
- 4 ஜி
- ஜிபிஎஸ், குளோனாஸ்
- 3.5 மிமீ ஹெட்செட் ஜாக்
- மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
- 18W பாஸ்ட் சார்ஜிங்
- 6,000 எம்ஏஎச் பேட்டரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக