துபாயில் இருந்து வந்த ஏர் இந்திய விமானம் கேரள
மாநிலம் கோழிக்கோடில் , மோசமான வானிலையால் விமான ஓடுதளத்தில், இறங்கும்போது
இரண்டாக உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள்
பாதிக்கபபட்டனர், ஒரு பைலட் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்
கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம்அறிவித்துள்ளதாவது :
மழைக்காலங்களில்
மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்படுவதாக
தெரிவித்துள்ளது.
மேலும், கேரள
மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரளாவில்
பெய்து வரும் பலத்த மழை வெள்ளம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக