Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

ரூ.9,499 க்கு இதுவே அதிகம்; மிஸ் பண்ண கூடாத தரமான பட்ஜெட் போன்!


5000mAh பேட்டரி மற்றும் க்வாட் கேமரா அமைப்பு போன்ற பிரதான அம்சங்களை கொண்டு Infinix Hot 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது. அதன் விலை மற்றும் அம்சங்கள் இதோ...

சமீபத்தில் இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இது கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிமுகமான, பட்ஜெட் ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஹாட் 8 உடன் ஒப்பிடும் போது மேம்பட்ட ப்ராசஸர் மற்றும் மேம்பட்ட பின்புற கேமராக்கள் போன்ற கவனிக்கத்தக்க மேம்படுத்தல்களுடன் வருகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் ஆனது மேட் பிளாக், சியான், வயலட் மற்றும் லைட் ப்ளூ போன்ற வண்ண விருப்பங்களிலும் மற்றும் சிங்கிள் மெமரி வேரியண்ட்டிலும் அறிமுகம் ஆகியுள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பரிவர்த்தனைகளில் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

அதே போல் ருபே டெபிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முதல் ப்ரீபெய்ட் பரிவர்த்தனையில் ரூ.30 தள்ளுபடி கிடைக்கும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டையுடன் 5 சதவீத வரம்பற்ற கேஷ்பேக்கையும் ஒருவர் பெறலாம். தவிர நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பத்தின் கீழ் மாதத்திற்கு ரூ.1,056 செலுத்தி இந்த ஸ்மார்ட்போனை பெறலாம். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499 ஆகும்.

இன்பினிக்ஸ் ஹாட் 9 அம்சங்கள்:

டூயல் சிம் ஆதரவு கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது, இது எச்டி+ ரெசல்யூஷனை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புற பேனலானது ஒரு பாலிகார்பனேட் பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் முன்னோடியான இன்பினிக்ஸ் ஹாட் 8 உடன் ஒப்பிடும்போது, சமீபத்திய இன்பினிக்ஸ் ஹாட் 9 ஆனது மேம்படுத்தப்பட்ட ப்ராசஸர் உடன் வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1.8GHz மீடியாடெக் ஹீலியோ A25 ஆக்டா கோர் SoC ப்ராசஸர் கொண்டு இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களைப் பொறுத்தவரை, முன்பக்கத்தில் ஹோல்-பஞ்ச் AI அம்சங்களுடன் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பின்புற பேனலில், செங்குத்தாக அடுக்கப்பட்ட க்வாட் கேமரா அமைப்பு உள்ளது, அதில் ஆட்டோ-ஃபோகஸ் மற்றும் AI லென்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. அதில் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் ஷூட்டர்கள் உள்ளன.

ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 6.0 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 10W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

பின்புற கேமரா அமைப்பிற்கு அடுத்ததாக கைரேகை ஸ்கேனர் உள்ளது. கூடுதலாக, இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் ஆனது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. உடன் ஃபேஸ் அன்லாக், ஏஆர் ஈமோஜி, ஏஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் டிடிஎஸ் ஆடியோ டெக்னாலஜி போன்ற அம்சங்களையும் இது கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக