விஜய்
சேதுபதி நடித்து வரும் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை
5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்
விஜய் சேதுபதி தற்போது நடிக்கும் படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். அறிமுக
இயக்குனரான டெல்லி பிரசாத் இயக்கும் இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா
மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில்
நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன்
ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார்.
சமீபத்தில்
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும்
வரவேற்பைப் பெற்றது. அரசியல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட்
சிங்கிளான அண்ணாத்தேசேதி என்ற பாடல் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக விஜய் சேதுபதி ரசிகர்கள் செம வெயிட்டிங்கில்
உள்ளனர் .
#AnnatheSethi FROM TODAY 5PM.#TughlaqDurbar @7screenstudio @DDeenadayaln @Lalit_SevenScr @govind_vasantha pic.twitter.com/1RywiR84bl
— VijaySethupathi (@VijaySethuOffl) August 3, 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக