இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள்
வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதனை தடுக்க நாம்
மருந்தகங்களில் மருந்து வாங்கி குடிப்பதுண்டு. ஆனால், அவை நமக்கு நிரந்தரமான
தீர்வை தராது.
தற்போது இந்த பதிவில், இயற்கையான
முறையில், இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி
பார்ப்போம்.
தேவையானவை
- கற்பூரவள்ளி இலை
- இஞ்சி
- மிளகு
- ஏலக்காய்
- எலுமிச்சை சாறு
- ஏலக்காய்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில், தண்ணீர்
ஊற்றி டீ தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். கற்பூரவள்ளி இலையை சேர்க்க வேண்டும்.
பின் சிறு துண்டு இஞ்சியை தோல் சீவி தட்டி போட வேண்டும். அதனுடன் மிளகு மற்றும்
ஏலக்காயையும் சேர்த்து தட்டி போட்டுக் கொள்ள வேண்டும்.
பின் மிதமான சூட்டில், சிறிது
எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி இந்த டீயை
குடித்து வந்தால், சளி, இருமல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக