தாம்சன் நிறுவனம் என்பது உண்மையில் ஒரு
ஐரோப்பிய தொழில்நுட்ப உற்பத்தியாளர் நிறுவனமாகும். ஆனால், இந்த நிறுவனம்
இந்தியாவைத் தளமாகக் கொண்டு ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் இயங்கிவருகிறது. தற்பொழுது
புதிதாக 9 அட்டகாசமான ஸ்மார்ட் டிவி சாதனங்களை உருவாகியுள்ளது. மலிவு விலையில்
துவங்கி லட்சம் ரூபாய் வரியில் புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவிலேயே 'மேட் இன்
இந்தியா' டேக் உடன் உருவாக்கியுள்ளது.
ரூ
.10,999 முதல் ஸ்மார்ட் டிவி
தாம்சன் நிறுவனம் உயர்தர தயாரிப்புகளை
வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான இந்தியச் சந்தையில்
தொடர்ச்சியான புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை தாம்சன் நிறுவனம்
அறிமுகப்படுத்தியுள்ளது. தாம்சன் தற்பொழுது அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் டிவிகள்
ரூ .10,999 முதல் துவங்கி ரூ.99,999 வரை செல்கிறது. உலகளாவிய தொற்றுநோய் காரணமாக,
மக்களின் தேவையை உணர்ந்து மலிவு விலையில் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.
புதிய
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி
குறிப்பாக இந்த ஊரடங்கு நாட்களில்
மாணவர்களுக்குத் தேவையா ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை
பார்க்கும் ஊழியர்களுக்குத் தேவையான அம்சங்களை ஸ்மார்ட் டிவியின் வழி அனுபவிக்க
நிறுவனம் இந்த முயற்சியை முயன்றுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதற்காக தாம்சன்
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை 'கூகிள் அசிஸ்டெண்ட்' ஆதரவுடன் இந்தியாவிலேயே
தயாரித்து இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதிதாக
9 ஆண்ட்ராய்டு மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டிவி
தாம்சன் நிறுவனம் புதிதாக 9
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மலிவான ஸ்மார்ட்
டிவி பட்டியலில் 9A சீரிஸின் கீழ் மூன்று ஸ்மார்ட் டிவிகளைக் தாம்சன் கொண்டுள்ளது.
9A
சீரிஸ் ஸ்மார்ட் டிவி
முதல் 9A சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடலான
'32 HD Path' டிவி ரூ .10,999 என்ற விலையில் வருகிறது, இரண்டாவது மாடல் '32 Bezel
Less' டிவி ரூ .11,499. என்ற விலையிலும், மூன்றாவது மாடலான '40 FHD PATH 'மற்றும்
'43 FHD PATH' டிவிகள் முறையே ரூ.16,499 மற்றும் ரூ .19,999 என்ற விலையில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
9R
சீரிஸ் ஸ்மார்ட் டிவி
தாம்சன் 9R சீரிஸ் ஸ்மார்ட் டிவி
மாடல்களின் கீழ் மொத்தம் 3 ஸ்மார்ட் டிவி மாடல்கள் உள்ளது, அவற்றில் '43 4K PATH'
மாடல் ரூ .21,999 என்ற விலையிலும், '50 4K PATH' மாடல ரூ .25,999 என்ற விலையிலும்
மற்றும் 9R சீரிஸின் '55 4K PATH' மாடல் ரூ .29,999 என்று அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. தாம்சன் நிறுவனத்தின் இந்த அனைத்து மாடல்களும் இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா சாதனங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
OATH
PRO ஸ்மார்ட் டிவி
அதேபோல், தாம்சன் நிறுவனம் அதிகவிலை
கொண்ட பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடல்களையும் தன் வசம் வைத்துள்ளது. OATH PRO என்ற
தாம்சனின் கடைசி சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை
நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் ஒன்று பிரீமியம் பிரிவில் விலை
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் முதல் மாடலாக '50 OATH PRO' மாடல் டிவி ரூ.
28,999 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மாடலாக '75 OATH PRO' ரூ. 99,999
என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக