அடுத்த ஆறு மாதங்களில் மொபைல் சேவைக்கான கட்டணம் அதிகரிக்கும் என பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் அதிக இணைய சேவை வழங்குவது தொலைத் தொடர்பு துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். ரூ.160க்கு மாதத்திற்கு 16GB டேட்டா வழங்குவது வருந்தக்கூடிய ஒன்று என குறிப்பிட்டுள்ளார். அந்த விலைக்கு மாதத்திற்கு 1.6GB மட்டும் உபயோகிப்பதே சரி என்றும், அதிக இணைய சேவை வேண்டுமென்றால் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘பயனரின் சராசரி வருவாய் எனப்படும் ARPU ரூ.200 வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆறு மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உள்ளிட்டவைகளை நீங்கள் பார்க்க விரும்பினால் அதற்கேற்ற இணைய சேவையை பெற வேண்டும். 2020ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ARPU ரூ.157 வரை உயர்த்தப்பட்டது.
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கடினமான சூழலில் நாட்டிற்கு சேவை வழங்கி வருகின்றனர். 5ஜி சேவை, ஆப்டிகல் ஃபைபர் கேபிள் உள்ளிட்டவைகளில் நிறுவனம் முதலீடு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக