Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

UPI பேமெண்ட் முறைக்கும் கட்டணமா? எத்தனை பரிமாற்றங்கள் இலவசம்? PSS சட்டம் சொல்வது என்ன?


இந்தியாவில் ஆன்லைன் பேங்கிங் அதிகம் பிரபலமடைவதற்கு முன்பே, பேமெண்ட் சேவைகள் அதிகம் பிரபலமடைந்துவிட்டன எனலாம்.
காரணம், இந்தியாவில் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற பேமெண்ட் அப்ளிகேஷன்கள், அதிகம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டன
இந்த பேமெண்ட் அப்ளிகேஷன்கள் இத்தனை பிரபலமாக, அடிப்படைக் காரணம் யூபிஐ என்று அழைக்கப்படும் Unified Payments Interface (UPI) வசதி தான். இப்போது இந்த யூ பி ஐ பணப் பரிமாற்ற முறைக்கும் கட்டணம் வசூலிப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

2.5 - 5.0 ரூபாய் கட்டணம்

பல தனியார் வங்கிகள், ஒரு மாதத்தில் 20 முறைக்கு மேல், யூ பி ஐ வழியாக, P2P (ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு) பணப் பரிமாற்றங்களை (Transaction) செய்தால், 2.5 ரூபாய் முதல் 5.0 ரூபாய் வரை கட்டணம் அறிமுகப்படுத்தி இருப்பதாக, எகனாமிக் டைம்ஸ் வலை தளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அந்த தனியார் வங்கிகளின் பெயர்களை குறிப்பிடவில்லை.

20 முறை மட்டுமே

ஆக, இந்த கட்டணங்களை அறிமுகப்படுத்தி இருக்கும் தனியார் வங்கிகளில், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், யூ பி ஐ பயன்படுத்தி, ஒரு மாதத்துக்கு 20 முறை மட்டுமே பி2பி பரிவர்த்தனைகளை (Transaction) மட்டுமே செய்ய முடியும். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு யூ பி ஐ பணப் பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

ஆசிஷ் தாஸ் அறிக்கை

மும்பை ஐஐடியைச் சேர்ந்த ஆசிஷ் தாஸ் என்பவர், யூ பி ஐ பணப் பரிமாற்றங்கள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், வங்கிகள் சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பொருள்படுத்திக் கொள்கிறார்கள் எனச் சொல்லி இருக்கிறார். Payment and Settlement Systems சட்டம் 2007 என்ன சொல்கிறது எனவும் விளக்கி இருக்கிறார் ஆசிஷ் தாஸ்.

PSS சட்டம் சொல்வது என்ன

பேமெண்ட் & செட்டில்மெண்ட் சிஸ்டம் சட்டம் 2007, பிரிவு 10A-ன் படி 'எந்த ஒரு வங்கியோ அல்லது பேமெண்ட் சிஸ்டம்களை வழங்கும் கம்பெனியோ, வருமான வரிச் சட்டம் 269 SU பிரிவின் கீழ் குறிப்பிட்டு இருக்கும் எலெக்ட்ரானிக் பேமெண்ட் மோட் வழியாக செய்யும் பேமெண்ட்களுக்கு, எந்த ஒரு கட்டணத்தையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, பேமெண்ட் செய்பவர்கள் அல்லது பேமெண்டை பெறுபவர்கள் மீது விதிக்ககூடாது' என்கிறது.

பேமெண்ட் Vs பணப் பரிமாற்றம்

Payment, Transaction என்கிற இரண்டு வார்த்தைகளை தங்களுக்கு சாதகமாக பொருள்படுத்திக் கொண்டு, வங்கிகள், கட்டணங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. அரசு தரப்பில் பேமெண்ட்கள் (Payment) இலவசம் என்கிறார்கள். எனவே வங்கிகள், பேமெண்ட்களை விட்டுவிட்டு, பணப் பரிமாற்றங்களுக்கு (Transaction) கட்டணங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். மாதம் 20 யூ பி ஐ பணப் பரிமாற்றங்களுக்கு கட்டணம் கிடையாது எனச் சொன்னது, அனாவசியமான பணப் பரிமாற்றங்களை குறைத்து, யூபிஐ சிஸ்டத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கத் தான் என வங்கித் தரப்பில் சொல்கிறார்களாம்.

என் பி சி ஐ சம்மதம்

கடந்த 14 பிப்ரவரி 2020 அன்று, வங்கிகள் மற்றும் என் பி சி ஐ உடனான சந்த்திப்பின் போது தான், மாதம் 20 யூ பி ஐ பணப் பரிமாற்றங்களை இலவசமாக கொடுப்பது குறித்து முடிவு எடுத்ததாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், என் பி சி ஐ தரப்பு, மாதம் 20 யூ பி ஐ பணப் பரிமாற்றங்களுக்கு மேல் வங்கிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்கிறார் ஆசிஷ் தாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக