சரும அழுக்கை முற்றிலுமாக போக்க தக்காளி.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது சரும அழகை மேம்படுத்த பல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பலரும் தங்களின் அதிகப்படியான பணத்தையும் இதற்காக செலவு செய்கின்றனர்.
தற்போது இந்த பதிவில் தக்காளியை கொண்டு எவ்வாறு சரும அழுக்கை போக்குவது என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- தக்காளி
- எலுமிச்சைசாறு
செய்முறை
தினமும் மாலையில் நாம் வீட்டிற்கு வந்தவுடன், முகத்தை சோப்பை வைத்து கழுவாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நேரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு அடிக்கடி செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்குவதுடன், முகமும் பொலிவுடன் காணப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக