அசத்தலான அகத்திகீரை சாம்பார் செய்யும் முறை.
நாம் அதிகமாக அனைத்து வகையான கீரைகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த கீரைகளில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது அகத்தி கீரை சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- அகத்தி கீரை - 1 கட்டு
- துவரம் பருப்பு - அரை கப்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- புளிக்கரைசல் - கால் கப்
- பச்சை மிளகாய் - 2
- சாம்பார் பொடி - அரை டேபிள் ஸ்பூன்
- உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
- வடகம் - 2 ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 3 சிட்டிகை
செய்முறை
முதலில் பருப்பை மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக வைக்க வேண்டும். பின் கீரையை நன்கு அலசி நீரை வடிகட்ட வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அகத்தி கீரை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வேகவைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதித்தவுடன் இறக்க வேண்டும். சாம்பார் போடி வாசனை போனதும் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். இப்பொது சுவையான அகத்திக்கீரை சாம்பார் தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக