நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள்.
நாம் சாப்பிடுகிற அணைத்து உணவுகளுமே, நமது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. ஒரு சிலருக்கு எல்லா உணவுகளும் ஒத்துக் கொண்டாலும், ஒருசிலரின் உடல் அணைத்து உணவுகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. சிலருக்கு சில வித்தியாசமான உணவுகள், அதிக எண்ணெய் சேர்த்த உணவுகள், காரமான உணவுகளை சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் பிரச்னை ஏற்படுவதுண்டு.
தற்போது இந்த பாதியில் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
இஞ்சி மிட்டாய்
நம்மில் சிலர் இரவில் உணவை சாப்பிட்ட உடன் உறங்க செல்வதுண்டு. இதனால், நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகாமல் இருப்பதுண்டு. அப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர், தூங்க செல்வதற்கு முன், இஞ்சி மிட்டாய் சிறிதளவு சாப்பிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வெந்நீர்
செரிமான பிரச்னை உள்ளவர்கள் வெந்நீரை குடித்தாலும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும், வெந்நீரில் சிறு துண்டு இஞ்சியை வெட்டி போட்டு கொதிக்க வைத்து குடித்தாலும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
ஓமம்
அடிக்கடி இந்த பிரச்னை ஏற்படுபவர்கள், வாரம் இருமுறை ஓமம் கலந்த நீரை பருகி வந்தால், இந்த பிரச்னை ஏற்படாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக