பிரபல ஓட்டபந்தய வீரர்உசேன் போல்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற மின்னல் வேக மனிதன் மற்றும் எட்டு முறை ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் உசேன் போல்ட். இவர் தனது 34 வது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் சில நாள்களுக்கு முன் கொண்டாடி உள்ளார்.
தற்போது, உசேன் போல்ட்க்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு போல்ட்க்கு கொரோனாபரிசோதனை செய்துள்ளனர். இதன் முடிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் வந்தது. அந்த முடிவில் உசேன் போல்ட்க்கு பாசிட்டிவ் என வந்துள்ளது.
இந்த செய்தியை உசேன் போல்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாடத்தில் ஆங்கில கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக