Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து என்னென்ன படங்கள்? எந்தெந்த தளத்தில்.?!


சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களின் படத்திற்கும் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம்.
அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் OTT  தளங்கள் விலைபேசி வருகின்றனவாம்.
அடுத்து, ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை சன் நெக்ஸ்ட் OTT  தளம் வாங்கியுள்ளதாம். கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படங்களான ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி ஆகிய படங்களை அமேசான் நிறுவனம் விலை பேசி வருகிறதாம்.
கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரித்து வரும் படங்களான  கா/பெ ரணசிங்கம் மற்றும்  சந்தானம் மூன்று வேடத்தில் நடித்துள்ள டிக்கிலோனா ஆகிய திரைப்படங்களை ஜி-5 OTT  தளம் விலை பேசி வருகிறதாம்.
சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து இன்னும் சில (பெரிய ஹீரோ படங்கள் கூட ) படங்கள் OTT  தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக