இணையத்தில் நம் சந்தேகங்களை போக்கும் தேடுப்பொறி நிறுவனமாக இருப்பதோடு கூகுள், நம் டிஜிட்டல் வாழ்விற்கு தேவையான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இத்துடன் இணையம் இல்லாத இடங்களில் அவற்றை பயன்படுத்தும் வசதியையும் கூகுள் வழங்கியிருக்கிறது.
அதேபோல் கூகுளின் டிரைவ் மென்பொருள் இல்லாத டிஜிட்டல் வாழ்க்கையை இன்று யாரும் கற்பனையிலும் நினைக்க முடியாது எனலாம். அன்றாட பணிகளில் துவங்கி, முக்கிய விவரங்களை குறித்து வைப்பது என எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் கூகுள் டிரைவ் ஏதேனும் பணிகளுக்கு அவசியம் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. எனினும், கூகுள் டிரைவ் சேவையில் பலரும் வாடிக்கையாக காணப்படும் அம்சங்களை நாள்படி பயன்படுத்தி இருப்பர்.
கூகுள் டிரைவில் அலுவல் பணிகளை சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் பயன்படுத்த உட்காரும் போது, டிரைவின் முகப்பில் சமீபத்தில் பயன்படுத்தியவற்றை ரீசென்ட் வியூ டேப் மூலம் நமக்கு காண்பிக்கும். இதில் பெரும்பாலும் நமது புகைப்படங்கள் தான் நிரம்பியிருக்கும். சில சமயங்களில் நம் நேரத்தை அபகரிக்கும் இந்த ரீசென்ட் வியூ பட்டியலில் புகைப்படங்களை நீக்க முடியும் என உங்களுக்கு தெரியுமா?
கூகுள் டிரைவ் சர்ச் பாரில் -jpg என டைப் செய்தால், அனைத்து புகைப்படங்களும் எடுக்கப்பட்டு, நீங்கள் சமீபத்தில் உருவாக்கிய அல்லது எடிட் செய்த தரவுகளை பார்க்க முடியும். இந்த அம்சம் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியிலும் வேலை செய்யும்.
கூகுள் டிரைவின் சர்ச் பார் மேல்புறமாக கீழ்பக்கத்தை குறிக்கும் அம்பு குறி இருக்கும். இதை க்ளிக் செய்ததும் உங்களின் சர்ச் பதில்களை ஃபில்ட்டர் செய்ய சில ஆப்ஷன்கள் தெரியும். ஆண்டுகளாக நீங்கள் டிரைவ் பயன்படுத்தியிருப்பின் இந்த அம்சம் உங்களுக்கு மிகவும் பயன்தரக்கூடியதாகும்.
இந்த நிலையில் கூகுள் டிரைவ் சேவையில் குறைபாடுகள் உள்ளதாக தற்போது கருத்துகள் எழுந்துள்ளன,இதற்கு காரணம் ஹேக்கர்கள் பயனாளர்களின் கூகுள் ட்ரைவ் கணக்கில் நுழைந்து மால்வேர்களை நிறுவுவதற்கு வாய்ப்புள்ளதாக பல கருத்துக்கள் எழுந்துள்ளன.இவ்வாறு செய்வதன் மூலம் பயனாளர்களின் கணக்குகளை ஹேக்கர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும்.
இதை செயல்படுத்தினால், பயனாளர்களின் தகவல்களையும் ஹேக்கர்கள் திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்பு கோப்புகள் பகிரப்படும் போது அவற்றுடன் சேர்த்து மால்வேர்களும் பரவக் கூடிய ஆபத்துகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக