இந்தியாவில்
டிக்டாக் தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு புதிய புதிய செயலிகள் வெளிவந்த
வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளத்திலும் டிக்டாக்
போன்ற ரீல்ஸ் வசதியை கொண்டுவர அந்நிறுவனம் முயற்சி செய்துவருகிறது.
மேலும்
புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை கண்டறிய பயனர்களை அனுமதிக்கும் புதிய
பயன்பாடுகளில் ஷேர்சாட் செயலியும் ஒன்றாகும், இதுவும் கிட்டத்தட்ட டிக்டாக் போன்ற
செயல்படும் என்றுகூறலாம். தற்சமயம் வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர்சேட்டை ஒருங்கிணைப்பதில்
இப்போது செயல்பட்டு வருகிறது.
தற்போது
வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புதிய அம்சத்தை கண்ட WABetaInfo இரண்டு
ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. மேலும் இதன்
தோற்றத்திலிருந்தே நமக்கு தெரிவது என்னவென்றால், ஷேர்சாட் வீடியோக்களுக்கு ஒரு பிரத்யேக
பிளேயரைக் கொண்டிருப்பதில் வாட்ஸ்அப் செயல்படுகிறது. இதே போன்ற ஒன்றை நாம் ஏற்கனவே
யூடியூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களுக்கு பார்த்திருக்கிறோம்.
குறிப்பாக
ஷேர்சாட் வீடியோக்கள் மற்றும் படங்களுக்கான வாட்ஸ்அப் ஒரு பிக்சர்-இன்-பிக்சர் (PiP)பயன்முறையைக்
கொண்டிருக்கும் என்றும், PiP பயன்முறை தனிப்பட்ட அரட்டை மற்றும் குரூப்களில்
பாப்-அப் செய்யப்படும் தனி ஒரு சாளரத்தில் வீடியோக்களை இயக்க அனுமதிக்கும் என்றும்
தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்-ன் பிரதான பக்கத்திற்கு
திரும்பும்போது கூட தொடர்ந்து இயங்குவதற்கு PiP பயன்முறை வீடியோவை ஆதரிக்கிறது.
சுருக்கமாக
கூறவேண்டும் என்றால்,பயனர் ஒருவர் ஷேர்சாட்டில் இருந்து வீடியோவை வாட்ஸ்அப்பில்
பகிர்ந்தால் ரிசீவர் இந்த வீடியோவை வாட்ஸ்அப்பிற்குள் தனித்தனியாக ஷேர்சாட்டைத்
திறக்கமால் பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் தளங்களில்
வாட்ஸ்அப்பில் ஷேர்சாட் ஒருங்கிணைப்பு வளர்ச்சியில் உள்ளது என்றும் அறிக்கை
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்கள் iOS 2.20.81.3 க்கான வாட்ஸ்அப்
பீட்டாவையும், Android 2.20.197.7 க்கான வாட்ஸ்அப் பீட்டாவையும் நிறுவுவதன் மூலம்
பீட்டா பயன்பாட்டில் அம்சத்தை முயற்சி செய்யலாம்.
ஷேர்சாட்
பற்றி கூறவேண்டும் என்றால், வீடியோக்களையும் படங்களையும் கண்டுபிடிப்பதற்கான
சிறந்த தளங்களில் ஒன்றாக செயல்படுகிறது. மேலும் இந்திய சமூக ஊடக தளமாக
பிரபலப்படுத்தப்பட்ட ஷேர்சாட் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச
நிறுவனங்களிடமிருந்தும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் பேஸ்புக்
நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயன்பாட்டிலிருந்து ஆதரவைப் பெறுவது என்பது
பரந்த அளவிலான அங்கீகாரத்தைக் குறிக்கிறது.
கவனிக்க
வேண்டியது என்னவென்றால், டிக்டாக்கிற்கு கூட வாட்ஸ்அப்பிலிருந்து இந்த வகையான
ஆதரவு இல்லை! அதே நேரத்தில், வாட்ஸ்அப் இந்த அம்சத்தை அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர்சாட் வீடியோ
ஒருங்கிணைப்பு நிலையான புதுப்பிப்பில் செய்ல்படலாம் அல்லது செய்ல்படாமலும் போகலாம்.
அது இறுதியாக நிறைவேறுமா இல்லையா என்பதை எல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க
வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக