Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

செப்டம்பர் முதல் இதெல்லாம் மாறப்போகுது!


ஒவ்வொரு மாதமும் முதல் நாள் எல்பிஜி சமையல் சிலிண்டர் விலை மாற்றப்படுகிறது. இதன்படி செப்டம்பர் 1ஆம் தேதியன்று எல்பிஜி சமையல் சிலிண்டர் விலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில், எல்பிஜி, சிஎன்ஜி, பிஎன்ஜிசி சிலிண்டர்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான டிக்கெட்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விமான டிக்கெட்டுகள் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணிகளுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு கட்டணத்தை உயர்த்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனால், உள்நாட்டு பயணிகள் ரூ.150க்கு பதிலாக ரூ.160 செலுத்த வேண்டும். சர்வதேச பயணிகள் 4.85 டாலருக்கு பதிலாக 5.2 டாலர் செலுத்த வேண்டும்.

​கடன் EMI சலுகை!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் தவணையை செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. எனினும், இது கடனை தாமதமாக செலுத்துவதற்கான காலம் மட்டுமே தவிர கடன் தள்ளுபடி அல்ல. இந்த இடைக்கால நிவாரணம் தற்போது முடிவுக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!