Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

பெண்ணுறுப்பு தளர்ந்திருக்கா? அதை மீண்டும் இறுக்கமாக்க முடியுமா? என்ன செய்ய வேண்டும்?



பொதுவாக பிரசவத்திற்கு பிறகு பெண்களின் பிறப்புறுப்பில் தளர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பெண்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எனவே தளர்ந்த பிறப்புறுப்பை எப்படி எளிதாக இறக்கலாம் அதற்கான வழிகள் குறித்து மகப்பேறியியல் நிபுணர் நம்மளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
பொதுவாக பிரசவத்திற்கு பிறகு பெண்களின் பெண்ணுறுப்பு பகுதியின் இறுக்கத் தன்மை குறைந்து போகிற வாய்ப்பு உள்ளது. பெண்ணுறுப்பு தளர்ந்து போவதால் நிறைய பேருக்கு உடலுறவில் இன்பம் கிடைக்காமல் போகலாம். ஆனால் இந்த தளர்வு ஒரே நாளில் ஏற்படுவதில்லை. அதற்கான வேறு வேறு காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
பிறப்புறுப்புத் தளர்வு
இது இயற்கையான ஒன்று. நிறைய பெண்களுக்கு தங்களுடைய பிறப்புறுப்பு பகுதியை இறுக்க முடியுமா என்ற சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மகப்பேறியியல் மருத்துவர் நிறைய ஆலோசனைகளை வழங்குகிறார்.
எனவே இதற்கு சில உடற்பயிற்சிகளை நாம் மேற்கொள்ளுவதன் மூலம் பிறப்புறுப்பு பகுதியை இறுக்கமாக்க முடியுமாம். சரி வாங்க தெரிந்து கொள்ளலாம்.
உடலுறவு காரணமா?
நிறைய உடலுறவு கொள்வது உங்க பிறப்புறுப்பை தளர்வாக்குமா
நிறைய உடலுறவு கொள்வதால் பிறப்புறுப்பு பகுதியானது தளர்வாகிறது என்று நிறைய பெண்கள் நம்புகின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. ஏனெனில் நம் பிறப்புறுப்பு தசைகளானது மீள் தன்மை வாய்ந்தது. எனவே நீங்கள் எவ்வளவு உடலுறவில் ஈடுபட்டாலும் அதன் நெகிழ்வுத்தன்மை இழக்காமல் இருக்கும். இதன் மூலம் தான் பிறப்புறுப்பானது உடலுறவுக்கு பிறகு அதன் நெகிழ்வுத்தன்மையை தக்க வைத்துக் கொள்கிறது.
அதிகமாக உறவு
அதிகமான பாலியலில் ஈடுபவர்கள் தளர்வான பிறப்புறுப்பை பெறுகிறார்களா?
இது உண்மைக்கு எதிர்மாறான ஒரு விஷயம். தளர்வான பிறப்புறுப்புக்கும் பாலியல் உறவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால் இது முற்றிலும் கட்டுக்கதை. பிறப்புறுப்பு தசைகள் மீள் தன்மை கொண்டு இருப்பதால் உடலுறவின் போது தூண்டப்பட்டு விரிந்து பிறகு மறுபடியும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. மீண்டும் சுருங்கி விடும்.
எனவே மேற்கண்ட காரணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள். உங்க பிறப்புறுப்பு பகுதி தளர்வாகுவதற்கான உண்மையான காரணங்கள் இதோ. பிறப்புறுப்பு பகுதி தளர்வாகுவதற்கான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.
இயற்கையான பிரசவம்
சாதாரண பிரசவத்தின் போது பிறப்புறுப்பை சுற்றியுள்ள தசைகள் பல அதிர்ச்சிகளைச் சந்தித்து அவற்றை பலவீனப்படுத்துகின்றன. எனவே இது பிறப்புறுப்பை தளர்வடைய செய்கின்றன. எனவே இயற்கையான பிரசவமும் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஈஸ்ட்ரோஜன் இழப்பு
வயதாகும் போது அல்லது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, ஈஸ்ட்ரோஜன் அளவின் வீழ்ச்சி உருவாகும் போது பிறப்புறுப்பு திசுக்கள் மெல்லியதாகவும் உலர்வாகவும் நீட்சியும் அடைகிறது.
உங்களுக்கு பிறப்புறுப்பில் தளர்வு பிரச்சனைகள் இல்லையென்றால் அதை இறுக்குவதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் நிறைய பெண்கள் சிறுநீர் அடக்க முடியாத தன்மை, சிறுநீர் கசிவு அல்லது உடலுறுவில் இன்பம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். அப்படி இருப்பவர்கள் சில எளிய இடுப்பு உடற்பயிற்சிகள் மூலம் உங்க பிறப்புறுப்பு தசைகளை இறுக்கமடைய செய்யலாம்.
இடுப்பு தசைகள்
உங்க இடுப்பு தள தசைகளை வலுப்படுத்த இந்த உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். ஏனெனில் இந்த இடுப்பு தள தசைகள் தான் உங்க சிறுநீர்ப்பை மற்றும் கருப்பைக்கு ஆதரவை வழங்குகிறது. எனவே பெண்கள் தங்கள் பிறப்புறுப்பு பகுதியை இறுக்கிக் கொள்ள கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்கிறார் மகப்பேறியியல் நிபுணர்.
கெகல் உடற்பயிற்சிகள்
பெண்கள் தங்கள் இடுப்பு தள தசைகளை வலுப்படுத்த கெகல் உடற்பயிற்சிகள் சிறந்தது. இது பிறப்புறுப்பு பகுதியின் நெகிழ்ச்சி மற்றும் சிறுநீர் கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது.
நீங்கள் இந்த கெகல் பயற்சிகளை வீட்டிலேயே செய்து வர முடியும். அதை எப்படி செய்யலாம் என்பதற்கான வழிகாட்டுதல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கெகல் பயிற்சி செய்யும் முறை
நீங்கள் தரையில் மல்லாக்க படுத்துக் கொள்ளுங்கள் அல்லது தரையில் சம்மணம் இட்டு அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இடுப்பு, யோனி மற்றும் ஆசனவாய் ஆகியவற்றை அழுத்துவதன் மூலம் தரையில் குறுக்காக கால் வைத்து உட்கார்ந்து கொள்ளலாம்.
இப்பொழுது உங்க பிட்டத்தை உயர்த்தி முழங்கால்களை மடக்கி கொண்டு அப்படியே கீழ் உடலை தூக்குங்கள். இந்த நிலையில் 4-5 விநாடிகள் வரை ஓய்வெடுக்கவும். இதை 5-10 முறை மீண்டும் செய்யுங்கள்.
பயன்கள்
இந்த பயிற்சி உங்க இடுப்பு தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. எனவே தான் கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் கெகல் உடற்பயிற்சி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதை செய்து கொண்டே வந்தால் காலப்போக்கில் உங்க பிறப்புறுப்பு பகுதி இறுக்கமடைவதை காணலாம் என்கிறார் மகப்பேறியியல் நிபுணர் அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக