Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

வேக வைத்த முட்டை டயட்டா? அதுல இவ்ளோ வேகமா எடை குறைக்கலாமா?

பொதுவாக முட்டையில் அதிகமாக கொலஸ்ட்ரால் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் வெறும் வேக வைத்த முட்டையைக் கொண்டு உங்க உடல் எடையை குறைக்க முடியுமாம். அது தான் இந்த முட்டை டயட். இந்த டயட்டை எப்படி பின்பற்றலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.
பொதுவாக முட்டைகள் மிகவும் சத்தான உணவாகும். ஏனெனில் இதில் அனைத்து வகை ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. பொதுவாக முட்டைகள் நமக்கு கொலஸ்ட்ராலை தரும் என்ற தவறான கரு மக்களிடையே நிலவி வருகிறது. உண்மையில் வேக வைத்த முட்டைகள் கலோரிகள் குறைந்தவை. மேலும் வேக வைத்த முட்டைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள், புரதம், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. 
எனவே நீங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்தால் வேக வைத்த முட்டைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது நீங்கள் கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. அந்த வகையில் வேக வைத்த முட்டையைக் கொண்டு உடல் எடையை எப்படி குறைக்க முடியும் என்பதை அறிந்து கொள்வோம்.
வேக வைத்த முட்டை டயட் என்றால் என்ன
வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வரும் போது இரண்டு வாரங்களில் 11 கிலோ வரை எடை இழப்பை பெற முடிகிறது. இந்த டயட் முறை 2018 ஆம் ஆண்டில் பிரபலமடைந்து வந்தது. ஏரியல் சாண்ட்லர் வெளியிட்ட புத்தகத்தில் இந்த உணவு பற்றி தான் முதலில் பேசப்பட்டது. எடை இழப்பு தவிர, வலுவான எலும்பு ஆரோக்கியம், நல்ல பார்வை, முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவீடுகளையும் பயனுள்ள முறையில் நாம் கட்டுப்படுத்தலாம். 

இந்த உணவின் முக்கியத்துவம் என்னவென்றால், குறைந்த கலோரி கொண்ட ஒன்றை சாப்பிடுவதில் கவனம் செலுத்துவதும், வேறு சில உணவுகளை சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துவதும் ஆகும், இது எடை இழப்பை துரிதப்படுத்தும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இதை எவ்வாறு பின்பற்றுவது
நீங்கள் ஒரு நாளில் வேக வைத்த முட்டைகளைத் தவிர மெலிந்த புரதங்கள் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்தின் குறைந்த கலோரிகளை நீங்கள் பெற முடியும். இந்த டயட்டின் கீழ் குறைந்த கலோரி பழங்களும் அனுமதிக்கப்படுகிறது. நீர், பிளாக் / க்ரீன் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) போன்ற பூஜ்ஜிய கலோரி பானங்களையும் நீங்கள் குடிக்கலாம். கொழுப்புகள், எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் ட்ரஸ்ஸிங் போன்றவற்றை சிறிய அளவில் பயன்படுத்தலாம். 

தானியங்கள், சில காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உயர் கார்ப் உணவுகள் வேண்டாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடுங்கள்
எனவே நீங்கள் சில வாரங்களுக்குள் உங்க உணவு முறையை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான உணவிற்கு மாற வேண்டும். முட்டையும் தண்ணீருமே உங்களுக்கு சிறந்த ஆரோக்கியமான உணவாக இருக்கும்.
முட்டை டயட் முறை எப்படி இருக்கும்
கொழுப்பை குறைக்க வேக வைத்த முட்டை எந்த வழிகளில் பயன்படுகிறது என்பதில் இந்த டயட் கவனம் செலுத்துகிறது. இந்த உணவு திட்டத்தின் படி காலையில் 2 வேக வைத்த முட்டைகள், மெலிந்த புரதம் மற்றும் பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் அதனுடன் சேர்த்து மதிய உணவிற்கு மாவுச்சத்து இல்லாத காய்கறி, குறைந்த கலோரி சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். 

பொதுவாக உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் உணவின் மூலம் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது எடுத்துக் கொள்ளும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். நாள் முழுவதும் நொறுக்கு தீனி களுக்கு அனுமதி கிடையாது.
 
 
இது எப்படி வேலை செய்கிறது
இந்த வேக வைத்த இரண்டு முக்கிய காரணிகளைக் கொண்டு செயல்படுகிறது. கலோரி கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு எடை இழப்பை சாத்தியமாக்குகிறது.
முட்டை, மாவுச்சத்து இல்லாத காய்கறிகள், உணவுத் திட்டத்தின் பிற கூறுகளும் கலோரிகளில் மிகவும் குறைவாக இருக்கும்போது, இது உடலில் ஒரு கலோரி பற்றாக்குறையை உருவாக்க முடியும் (ஒரு நாளில் நீங்கள் செலவிடுவதை விட குறைந்த கலோரிகளை உட்கொள்ளலாம்). இது ஒரு சிறந்த எடை இழப்புக்கான அடிப்படையான திட்டமாக அமைகிறது.
எதற்காக இந்த டயட்?

இரண்டாவதாக, குறைந்த கார்ப் உணவுகளை சாப்பிடுவது எடை இழப்பை துரிதப்படுத்த மேலும் உதவுகிறது . ஆரோக்கியமான, மெலிந்த புரதத்தின் சில மூலங்களைச் சேர்ப்பது நீண்ட காலத்திற்கு எடையை நிர்வகிக்க நமக்கு உதவியாக இருக்கும்.
உங்க ஒட்டுமொத்த உணவு உட்கொள்ளுதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், முட்டை உங்களை அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வை வழங்கக் கூடும். காலப்போக்கில் இது உங்களுக்கு நல்ல எடை இழப்பை தருகிறது.

இதர பயன்கள்

இந்த வேக வைத்த முட்டை டயட்டின் நல்ல நன்மைகள் என்னவென்றால், பதப்படுத்தப்பட்ட அல்லது ஆரோக்கியமற்ற சேர்க்கைகள், சர்க்கரை அல்லது அதிகப்படியான காஃபின் போன்றவற்றை சாப்பிடுவதை இது கட்டுப்படுத்துகிறது. ஏனெனில் அவை உங்களுக்கு மோசமானவை.
இந்த டயட் அதிகபட்சம் 9-10 வார காலத்திற்கு தொடர்ந்து மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே குறுகிய கால எடை இழப்பு உங்க மனதில் லட்சியமாக இருந்தால் இந்த டயட் முறை உங்களுக்கு நன்மை பயக்கும்.
இந்த டயட்டில் ஏதேனும் சிக்கல் உள்ளதா

இந்த டயட்டின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று அதன் கட்டுப்படுத்தப்பட்ட தன்மை தான். இந்த டயட் குறைந்த கலோரி, குறைந்த கார்ப் உணவுகளை உட்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது மற்றும் உங்கள் உணவு திட்டத்திலிருந்து பிற உணவுப் பொருட்களை வெளியேற்றுகிறது. இதன் முக்கிய நோக்கம் குறுகிய காலத்தில் எடை இழப்பை தருவது தான். இதிலுள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் கட்டுப்படுத்தப்பட்ட உணவுகள் நீண்ட காலத்திற்கு நிலையானவை அல்ல. சிலர் கட்டுப்பாடான உணவுகளைப் பின்பற்றிய பிறகு கூட எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
3 முட்டை
ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகளை எடுத்துக் கொள்ளலாம்
ஒரு நாளைக்கு நீங்கள் 3 முழு முட்டைகள் வரை சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று அறிவியல் சான்று கூறுகிறது.
ஒரு நாளைக்கு எத்தனை வேக வைத்த முட்டை சாப்பிட வேண்டும் இருப்பினும், முட்டைகள் உடலை வெப்பமாக்குகின்றன மற்றும் கொழுப்பின் அளவை உயர்த்தக்கூடும். எனவே முட்டைகளை மிதமாக பாதுகாப்பாக உட்கொள்ளுவது நல்லது.
முடிவு
வேக வைத்த முட்டை டயட்டில் நன்மை தீமைகள் இரண்டுமே உள்ளன. இந்த டயட்டில் சரியான உணவுத் தேவையை தேர்ந்தெடுப்பதன் மூலம் நிறைய நன்மைகளை நீங்கள் பெற முடியும். எனவே, உடல் எடையை குறைக்க மிகவும் நிலையான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுவது நீண்ட காலம் ஃபிட்டராக இருக்க உதவும்.நல்ல உடற் பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், நல்ல உணவுகள், சரியான நேரத்தில் உணவு மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் ஆகியவை எடை நிர்வாகத்திற்கான காரணிகளாக செயல்படுகிறது என்பதை மறவாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக