>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

    மண்பானையில் சமையல் செய்வதால் கிடைக்கும் உடல் ஆரோக்கியம்; எப்படி...?

    Manpaanai

    நம்முடைய முன்னோர்கள், சமைக்க, சாப்பிட, நீர் அருந்த என அனைத்திற்கும் பெரும்பாலும் மண்பாண்டங்களையே பயன்படுத்தினர். இதன் காரணமாகவே அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், நோய்களுக்கு இடம்கொடுக்காமலும் வாழ்ந்தனர்.

    மண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும்,  தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக  இருக்கிறது.

    மண்பாண்டத்தில் சமைப்பதால், வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால், உணவு சூடாகவே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது.

    பாத்திரம் முழுவதும்  வெப்பம் மெதுவாகப் பரவுவதால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன. இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம்.

    மண்பாண்டங்களில் ஆல்கலைன்கள்  நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில்  அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.

    மண்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர். 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக