ஊரடங்கு காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல் இருந்தது. சென்னை திநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஊழியர் வினோதமான ஒரு மோசடி சிக்கலில் சிக்கித் தவித்திருக்கிறார். ஊரடங்கு நாட்களில் பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழகி, அவருடன் வீடியோ கால் மூலம் நெருக்கமாகியுள்ளார். அதுவே இறுதியில் ஆபத்தாகிவிட்டது.
பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம்
சென்னை திநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஊழியர், பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். ஊரடங்கு நாட்களில் பல நாட்களாக பேசி பழகிய இவர்களின் நெருக்கம் அதிகரித்ததும். இருவரும் வீடியோ கால்லிங் செயலி மூலம் நெருக்கத்தை அதிகரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோ கால்லிங் அழைப்பில் ஆனந்தமாகியுள்ளனர்.
அந்தரங்கமாக வீடியோ அழைப்பு
இவர்கள் அந்தரங்கமாக வீடியோ அழைப்பில் பழகியதை அந்த பெண் தனது போனில் அந்த ஆண் நபருக்குத் தெரியாமல் ரெக்கார்டு செய்திருக்கிறார். அடுத்து அந்த வீடியோவை வைத்து அவரை மிரட்டியுள்ளார். கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
ஆர்டர் செய்த டிரஸ் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?- அதிர்ந்து போன வாடிக்கையாளர்!
பெண்ணின் மிரட்டல்
பெண்ணின் மிரட்டலுக்குப் பயந்து போன அதிகாரி பெண் கேட்ட தொகையை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார். மிரட்டலுக்கு பயந்து அந்த நபர் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு முதலில் ரூ. 80,000 அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் மீண்டும் மிரட்டல்
ஆனாலும், அந்த பெண் அடங்குவதாகத் தெரியவில்லை மீண்டும் மீண்டும் அந்த பெண் அவரை மிரட்டி பணம் கேட்டிருக்கிறார். பெண்ணின் மிரட்டல் கொடுமையில் விரக்தி அடைந்த நபர் பாண்டிபஜார் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். அவர் பதிவு செய்த வழக்கின் கீழ் அந்த பெண்ணை கைது செய்ய போலீசார் அவரை தேடிவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக