Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா..?

ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக  ராஜினாமா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நிலை குறித்த ஊகங்கள் பல வாரங்களாக செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பிடப்படாத நோய் காரணமாக சமீபத்தில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.
மேலும், உள்ளூர் ஊடகங்களில் தனது நோய் மோசமடைந்துள்ளதால் அபே ராஜினாமா செய்ய விரும்புகிறார் எனவும், நாட்டை வழிநடத்துவதில் இது சிக்கலை ஏற்படுத்தும் என அவர் கவலைப்படுகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமர்பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!