Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஆகஸ்ட், 2020

விவசாய நிலங்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள்: மதுரை அருகே அதிர்ச்சி!

விவசாய பயிர்களை நாசமாக்கி கடுமையான உணவு பஞ்சத்தை ஏற்படுத்தக் கூடியவை வெடுக்கிளிகள். பாகிஸ்தான் எல்லையையொட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே வெட்டுக்கிளிகள் படையெடுப்பு வழக்கமாக இருக்கும் நிலையில்,அம்மாநிலத்தின் ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களின் குடியிருப்பு பகுதிகள், மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகள் வரை சில மாதங்களுக்கு முன்னர் காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வெட்டுகிளிகள் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளை கடந்து இந்திய பெருங்கடல் வழியாக இந்தியாவுக்குள்ளும், பாகிஸ்தானுக்குள்ளும் படையெடுக்கும் என ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும், வெட்டுக்கிளிகள் படையால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை என தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்தி கையாள்வதற்கான வழிமுறைகளையும் வேளாண் துறை வெளியிட்டுள்ளது. ஆனாலும், தமிழகத்தில் ஆங்காங்கே வெட்டுக்கிளிகள் படையெடுப்பு காணப்படுவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


அந்த வகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தில் நேற்று படையெடுத்த வெட்டுக்கிளிகள், சுமார் 5 ஏக்கர் விவசாய நிலங்களை நாசம் செய்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


அதன் தொடர்ச்சியாக, வெட்டுக்கிளிகள் ஏற்படுத்திய சேதம் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் இன்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக