டாஸ்மாக்
கடைகளில் எலைட் மதுபான கடைகளில் இருப்பது போல் உயர்ரக வசதி ஒன்றை தமிழகத்தின்
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிமுகப்படுத்த இருப்பதாக டாஸ்மாக் மேலாண்மை
இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில
வாணிபக் கழகம்
தமிழ்நாடு
மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக், இது தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும்
அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்தமாகவும்
சில்லரையாகவும் வர்த்தகம் செய்ய உரிமை பெற்றிருக்கிறது.
டாஸ்மாக்
கடைகளால் குடிப்பழக்கம் அதிகரிப்பு
சமுதாயத்தில்
டாஸ்மாக் கடைகளால் குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது எனவும் பொதுமக்கள்
உடலநலத்திற்கு கேடு ஏற்பட்டு வருகிறது எனவும் எதிர்ப்புகளும் போராட்டங்களும்
அவ்வப்போது நடந்து வருகிறது. அரசே மதுபானத்தை விற்பனை செய்வதை தடைசெய்யக் கோரி
பல்வேறு தரப்பினரும் வலியுறித்து வருகின்றனர்.
5
ஆயிரத்து 330 மதுபான கடைகள்
இந்த
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார்
செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டாஸ்மாக் சார்பில் தமிழகத்தில்
சுமார் 5 ஆயிரத்து 330 மதுபான கடைகள் உள்ளன. இந்த அனைத்து கடைகளிலும் மின்னணு
விற்பனை எந்திரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள்
7 வங்கிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஐசிஐசிஐ வங்கி தேர்வாகி உள்ளது.
ஐசிஐசிஐ
வங்கியுடன் ஒப்பந்தம்
இதையடுத்து
ஐசிஐசிஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள டாஸ்மாக் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது
டாஸ்மாக் வரும் மதுபிரியர்கள் மது வாங்கி அதற்கான தொகையை டெபிட் கார்டுகள், யுபிஐ,
க்யூ ஆர் கோட் உள்ளிட்டவைகள் மூலம் செலுத்தலாம்.
மின்னணு
விற்பனை எந்திரங்கள்
அனைத்து
டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும் மின்னணு விற்பனை எந்திரங்கள் பயன்படுத்துவற்கு
முறையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த பணி சுமார் 2 மாதங்களில் நிறைவடையும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணை
பிறப்பிப்பு
முன்னதாக
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில் டாஸ்மாக் மதுபான கடைகளில்
மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவி விற்பனை தொகையை அதன்மூலம் பெற்றுக் கொள்ள
ஏற்பாடு செய்யும்படி ஆணை பிறப்பித்திருந்தது.
மின்னணு எந்திரங்கள் வழியாக விற்பனை தொகை
சென்னை
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க மின்னணு விற்பனை எந்திரங்கள் வழியாக அனைத்து
டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை தொகையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக