Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

மாதவிடாய் காலத்தில் அதிக வலி இருப்பது குடல்வால்வு பிரச்சினையாக மாறுமா? உண்மை என்ன?


சில சமயங்களில் குடல் அழற்சியை தவறுதலாக மாதவிடாய் பிடிப்புகள் என்று கருதப்படுகிறது. இதனால் குடல் அழற்சியை ஆரம்பித்திலயே கண்டறிய முடியாமல் போகிறது. எனவே எப்படி குடல் அழற்சியை மாதவிடாய் பிடிப்புகளில் இருந்து வேறுபடுத்தலாம் இது குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் வாங்க தெரிஞ்சுக்கலாம்.
நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பில் குடலும் ஒன்று. குடலில் நுனிப்பகுதியில் சின்னதாக வால் போன்ற பகுதி காணப்படும். அதை குடல் வால் என்று கூறுவர். இந்த குடல்வாலுக்கு எந்த வித வேலையும் இல்லாவிட்டாலும் கூட இது மிக முக்கியமானது. காரணம் இதில் அழற்சி ஏற்பட்டால் பலவித உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். இது உங்களுக்கு பெரிய சிக்கல்களை உண்டாக்கும். குடல் வால் அழற்சி ஏற்பட்டால் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து குணப்படுத்துவது அவசியம்.

குடல் வால் அழற்சி என்றால் என்ன

குடல் வால் அழற்சி ஒரு பிற்சேர்க்கை அழற்சி நிலை ஆகும். இது வீக்கத்திற்கு வழி வகுக்கிறது. சளி, ஒட்டுண்ணிகள் அல்லது மலம் கூட உருவாகுவதால் ஏற்படக்கூடிய சில தடைகள் காரணமாக இந்த குடல் வாலில் அழற்சி உண்டாகலாம். இந்த குடல் வால் அழற்சி குறித்து மருத்துவர் நம்மிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

குடல் பகுதியில் ஏற்படும் அடைப்பு காரணமாக அந்த பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் பெருகத் தொடங்குகின்றன. இது இறுதியில் குடல் அழற்சிக்கு வழி வகுக்கிறது.
இந்த அழற்சி படிப்படியாக வளர்ந்து சிறுகுடலின் சந்திப்பில் சிக்கலை உண்டாக்குகிறது. உண்மையில் ஆரம்பத்தில் உங்க கீழ் வயிற்றில் வலி ஏற்படலாம். அதாவது வயிற்றின் வலது புறம் வலி உண்டாகும்.

குடல் வால் அழற்சியின் அறிகுறிகள்

ஆரம்பத்தில் இது போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்
காய்ச்சல்
குமட்டல்
வாந்தி
உங்க அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலி உண்டாதல்
குடல் வாலில் சீழ் பிடிப்பதால் வயிற்று போக்கு ஏற்படுதல்

யார் அதிக ஆபத்தில் உள்ளனர்
வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது இளம் வயதினருக்கும் ஏற்படலாம். இதை நீங்கள் புறக்கணித்தால் நாள்பட்ட உடல் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. இதில் வயதானவர்கள் அதிக சிக்கல்களை சந்திக்கின்றனர். குடல் வால் திடீரென வெடித்தால் அது செப்டிசீமியாவை உண்டாக்கும். இது கடுமையான இரத்த நோய்த்தொற்றுக்கு வழி வகுக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்படும் போது கருப்பை பின்னினைப்பை தள்ளுகிறது. இது அடிவயிற்றின் மேல் வலியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இது

அடிவயிற்றின் கீழ் வலி இருக்காது.

கர்ப்பிணி பெண்களில் குடல் அழற்சி மற்றும் கர்ப்பம் இரண்டையும் வேறுபடுத்தி காட்டுவது கடினமாக இருக்கும். குடல் வால் அழற்சியின் போது பெண்கள் வாயு, வீக்கம் மற்றும் வாந்தி போன்றவற்றை சந்திக்கின்றனர். இது கர்ப்பத்திலும் பொதுவாக காணப்படுகிறது. இதனால் இதை கண்டறிவது கடினமாக உள்ளது.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்

உங்க அடிவயிற்றின் கீழ் வலது பக்கத்தில் தாங்க முடியாத வலி மற்றும் காய்ச்சல் இருந்தால், அது கவலைக்குரிய ஒன்றாக அமையும். சில சந்தர்ப்பங்களில், 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருப்பது சிதைந்த குடல் வால் காரணமாகவும் இருக்கலாம். அதே மலம் கழிப்பது உங்களுக்கு கடினமாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

புறக்கணிப்பு

கர்ப்பம் மற்றும் குடல் வால் அழற்சி அறிகுறிகளை பெண்கள் வேறுபடுத்தி கண்டறிவது மிகவும் கடினமானது. இதில் பெண்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த அறிகுறிகளை நீங்கள் சரியான நேரத்தில் கண்டறிந்தால் குடல் அழற்சி சிகச்சை அளிக்க கூடியதாக இருக்கும். குடல் வாலை அகற்றிய பிறகு ஒரு சாதாரண வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
எனவே குடல் அழற்சியின் வலியை சாதாரண பிடிப்புகளுடன் குழப்புவதில் பெண்கள் தவறு செய்ய நேரிடலாம். எனவே நீங்கள் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக