Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

ஜூம் செயலியில் வந்த புத்தம் புதிய அப்டேட்: என்னென்ன தெரியுமா?

வெளிவந்த தகவலின்படி ஜூம்
ஜூம் செயலி ஆனது தொடர்ந்து புதிய அப்டேட்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் இந்த செயலி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன, ஆனால் மிகவும் பாதுகாப்புடன் இந்த செயலி செயல்படுவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த ஜூம் செயலி சார்ந்த புதிய தகவல் வெளிவந்துள்ளது அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
தற்சமயம் வெளிவந்த தகவலின்படி ஜூம் செயலியில் புதிய வீடியோ மற்றும் ஆடியோ அம்சங்கள் சேர்கப்பட்டுள்ளன. இந்த புத்தம் புதிய அப்டேட்டில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சில வசதிகளும் வந்துள்ளது.
அதன்படி தற்போதைய அப்டேட்டில் விர்ச்சுவல் மீட்டிங்ஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் புதிய ஃபில்டர்கள், வீடியோ கால்களில் மேம்பட்ட லைட்டிங் மற்றும் ஆடியோ கால்களுக்கு மேம்பட்ட நாய்ஸ் சப்ரெஷன் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது வீடியோ கால் பேசும் போது அலுவலகத்தில் இருக்கும் அனுபவம் கிடைக்காமல் இருந்தது, விர்ச்சுவல் மீட்டிங் அனுபவத்தை புதிய அம்சங்கள் மேம்படுத்தும் என ஜூம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
இப்போது மைக்ரோசாப்ட்,கூகுள் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஜூம் செயலியில் புதிய அம்சங்கள் சமீப காலங்களில் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்சமயம் அழைப்புகளின் செக்யூரிட்டியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. பின்பு போட்டியை எதிர்கொள்ள ஜூம் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக நாய்ஸ் செட்டிங் ஜூம் செயலியின் செட்டிங் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பின்பு இவற்றை லே, மிட் மற்றும் ஹை என
பயனர் விருப்பப்படி செட் செய்து கொள்ளலாம். மேலும் ஜூம் வீடியோ செட்டிங்ஸ் பகுதியில் லைட்டிங் மற்றும் பேக்கிரவுண்ட்டை மாற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
அண்மையில் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் ஆயிரம் பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்பு கூகுள் மீட்ஸ்
சேவையில் கூட புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் என்க்ரிப்ஷன் போன்ற இதர அம்சங்களை வழங்கும் பணிகளில் ஜூம் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக