Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

Vivo Y1s ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?


புதிய Vivo Y1s
விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வரிசையில், புதிதாக ஓரு மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. விவோ நிறுவனம் தனது ஒய்-சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையின் கீழ் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரத்தைப் பார்க்கலாம்
புதிய Vivo Y1s
விவோ நிறுவனம் புதிதாக Vivo Y1s என்ற ஸ்மார்ட்போன் மாடலை தனது ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விவோ ஒய் 1 எஸ் ஸ்மார்ட்போன் ஒரே ஒரு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விவோ Y1s ஸ்மார்ட்போன், 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலில் அரோரா ப்ளூ மற்றும் ஆலிவ் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விவோ Y1s விவரக்குறிப்புகள்
விவோ Y1s ஸ்மார்ட்போன், 6.22' இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி பேனலைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் சேமிப்பை விரிவாக்கக் கூடிய வசதியும் இதில் உள்ளது.
கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சலின் கொண்ட ஒற்றை பின்புற கேமரா ஒரு எஃப் / 2.2 அப்பர்ச்சர் மற்றும் எல்இடி ப்ளாஷ் உடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமராவும் உள்ளது, இதில் எஃப் / 1.8 அப்பர்ச்சர் கொண்டுள்ளது.
விவோ Y1s ஸ்மார்ட்போன் இணைப்பு
விவோ Y1s ஸ்மார்ட்போன், 4030 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட தனிப்பயன் ஃபன்டூச்சோஸ் 10.5 இயங்குதளத்துடன் வருகிறது. இதில் கைரேகை ஸ்கேனர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டூயல் 4 ஜி வோல்டிஇ சிம் ஆதரவு, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும்
விலை
விவோ நிறுவனம் புதிய விவோ Y1s ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மதிப்பின்படி வெறும் ரூ.8,166 என்ற விலையில் தற்பொழுது கம்போடியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியச் சந்தியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் எப்பொழுதும் மலிவான விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக