கன்னியாகுமரியில் மாசஜ் செண்டர்
ஒன்று ஊரடங்கில் பாலியல் தொழில் தளமாக மாறியது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா ஸ்தலமாக விலங்குவதால்
வெளிநாட்டினருக்கான மசாஜ் செண்டர்கள் அங்கு ஏராளமாக இருக்கும். தற்போது கொரோனா காரணமாக
பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான மசாஜ் செண்டர்கள்
மூடப்பட்டுள்ளது.
ஆனால், ’’பிளாக் மூன்” என்ற பெயரில் இயங்கி வரும் மசாஜ்
செண்டர் மட்டும் அவ்வப்போது திறந்து இருப்பதாகவும் அங்கு பாலியல் தொழில்
நடப்பதாகவும் போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. முதலில் இதை கண்டுக்கொள்ளாதா
போலீஸார் மீண்டும் மீண்டும் புகார் வரவே அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் நடப்பது
உறுதியானது. இதையடுத்து அங்கிருந்த ஒரு பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சோதனையின் போது இரண்டு ஆண்கள் பின்வாசல் வழியாக தப்பியுள்ளனர். அவர்களை
தேடும் பணியில் போலீஸார் ஈடுப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக