COVID -19 நெறிமுறையின்படி சபரிமலை யாத்திரை
நடத்தப்படும் என்றும், மெய்நிகர் வரிசை முறை மூலம் பக்தர்களின் எண்ணிக்கை
கட்டுப்படுத்தப்படும் என்றும் தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான சபரிமலை யாத்திரை (Sabarimala
Pilgrimage) நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கும்.
இந்த
ஆண்டிற்கான பக்தர்கள் வருகை செயல்முறை குறித்த உயர்மட்டக் கூட்டம் திங்களன்று
நடைபெற்றது. சபரிமலை கோயிலுக்கு இந்த ஆண்டு வரும் பக்தர்கள் COVID-19 பரிசோதனை
செய்துகொண்டு, கோவிடுக்கு எதிர்மறையான சான்றிதழை கண்டிப்பாகக் கொண்டிருக்க
வேண்டும் என அமைச்சர் திங்களன்று உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும்
காவல்துறையின் மெய்நிகர் வரிசை மேலாண்மை அமைப்பு (Virtual Queue management
System) மூலம் நுழைவு கட்டுப்படுத்தப்படும். இதனால் அதிக அளவு கூட்டம் கூடுவது
தவிர்க்கப்படும்.
சன்னிதானம்,
பம்பா (Pampa) மற்றும் நிலக்கல் ஆகிய
மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுநோய்க்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் சிகிச்சைக்கான
ஏற்பாடுகளும் பலப்படுத்தப்படும். பக்தர்களுக்கு இடையே தனி மனித இடைவெளியை (Social
Distancing) உறுதி செய்ய பம்பாவிற்கும் நிலக்கல்லுக்கும் இடையே அதிக KSRTC
பேருந்துகள் இயக்கப்படும்.
பேரழிவு
முகாமைத்துவத்திற்கான அவசரகால செயல்பாட்டு மையத்தையும், அவசரகால வெளியேற்றத்திற்கு
ஹெலிகாப்டர் சேவையையும் தொடங்குமாறு பதனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அரசிடம்
கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவாங்கூர் தேவஸ்வம் (Travancore
Devaswom) வாரியத் தலைவர் என் வாசு அவர்கள் பக்தர்களின்
வருகைக்கான பல்வேறு ஏற்பாடுகளைத் தாங்கள் தொடங்கியுள்ளதாக கூட்டத்தில்
தெரிவித்தார். சபரிமலை யாத்திரை தொடங்குவதற்கு முன்னர் வாரியத்தின் கட்டிடங்களை
காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தை அவர் கேட்டுக்கொண்டார். COVID-19
சிகிச்சைக்காக கட்டிடங்கள் கையகப்படுத்தப்பட்டன. கடைகளின் ஏலத்திற்கு
வர்த்தகர்களிடமிருந்து கிடைக்கும் பதிலைப் பொறுத்து, அந்த இடத்தில் நுகர்வோர்
மற்றும் பிற கூட்டுறவு நிறுவனங்களின் விற்பனை நிலையங்களைத் திறக்கவும் கூட்டத்தில்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக