கனடாவின் கடைசி பனி கட்டி
மலைதொடர்கள், தீவுகளாக உடைந்து போனது. அதிகரிக்கும் வெப்பம் மற்றும்
புவி வெப்பமடைதல் தான் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
72 சதுர மைல் (187 சதுர கிலோமீட்டர்)
நீளமாக இருந்த இந்த பனி மலைத் தொடர் கொலம்பியா மாவட்டத்தை விட பெரிய பரப்பளவில்
இருந்தது, ஆனால் இப்போது அது 41 சதுர மைல்கள் (106 சதுர கிலோமீட்டர்) என்ற
அளவில் குறைந்துள்ளது
எல்லெஸ்மியர் (Ellesmere) தீவின்
வடமேற்கில் உள்ள கனடாவின் 4,000 ஆண்டுகள் பழமையான மில்னே ஐஸ் ஷெல்ஃப் (Milne Ice
Shelf) அந்த நாட்டின் கடைசியாக மிச்சமிருந்த பனி பாறை தொடராக இருந்தது, கனடாவின்
ஆய்வாளர்கள் இதன் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம், அதில் 43 சதவீதம்
உடைந்துவிட்டது என்பதை கண்டறிந்தனர். ஜூலை 30 அல்லது 31 தேதிகளில் இது
நடந்திருக்கிறது என்று அவர் கூறினார்.
ஏராளமான சிறிய பனிப்பாறைகள் இரண்டு
பெரிய பனிப்பாறைகள் ஏற்கனவே உருகி உடையத் தொடங்கியுள்ளன என விஞ்ஞானிகள்
தெரிவிக்கின்றனர். மன்ஹாட்டனின் 21 சதுர மைல் (55 சதுர கிலோமீட்டர்)
அலவிற்கு பரந்திருந்த பனிப்பாறை மற்றும் 7 மைல் நீளம் (11.5 கிலோமீட்டர்) அளவு
பரவியிருந்த பனிப்பாறைகள் உடைந்து, அவை 230 முதல் 260 அடி (70 முதல் 80
மீட்டர்) என்ற அளவிற்கு குறைந்து விட்டது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
1980 முதல் 2010 வரை உள்ள காலகட்டத்தை
பார்க்கும் போது, அப்பிராந்தியத்தில் மே முதல் ஆகஸ்ட் தொடக்கத்தில் வெப்பநிலை
சராசரி அளவை விட வெப்பம் 9 டிகிரி அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள்
குறிப்பிடுகின்றனர். இங்குள்ள வெப்பநிலை 5 டிகிரி செல்ஷியஸாக உள்ளது என்று ஒட்டாவா
பல்கலைக்கழக பனிப்பாறை பேராசிரியர் லூக் கோப்லாண்ட் தெரிவித்தார். ஏற்கனவே உலகின்
மற்ற பகுதிகளை ஆர்டிக் பகுதி மிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது என
பேராசிரியர் கூறினார்.
சந்தேகத்திற்கு இடமின்றி, இது காலநிலை
மாற்றம் என்று கோப்லாண்ட் கூறினார். பனிகட்டி மலைகள், வெப்பமான காற்று
மற்றும் அதிகரிக்கும் வெப்பதினால் தண்ணீரின் வெப்ப நிலை அதிகரிப்பதால்
உருகிக் கொண்டிருக்கிறது.
பேராசிரியர் மில்னே கூறுகையில் '' இது
ஒரு அதிசயமான அழகான இடம். பனி கட்டித் தொடர்கள் அனைத்தும் நூற்றுக்கணக்கான முதல்
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை. மிகவும் தடிமனாக இருக்கின்றன, ஆனால்
பனிப்பாறைகளைப் போல பெரியதாகவும் பழையதாகவும் இல்லை, '' என்று கோப்லாண்ட்
கூறினார்.
2005 ஆண்டில் ஆறு பனி மலைத்
தொடர்கள் இருந்தது, ஆனால், அனைத்தும் உருகி, இந்த மில்னே தான மிச்சமிருந்த
கடைசி முழுமையான பனி மலைத்தொடராக இருந்தது, "என்று அவர் கூறினார்.
ஆர்க்டிக்கைச் சுற்றி இப்போது அதிகமான
பனி மலைகள் இல்லை என கோப்லாண்ட் கூறினார். '' வடக்கு கிரீன்லாந்து மற்றும் ரஷ்ய
ஆர்க்டிக்கிலிருந்து வரை நாம் நிறைய பனிகட்டி மலைகளை ழந்துவிட்டோம். சில பனிக்கடி
மலைகளே இப்போது மிச்சம் உள்ளன '' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக