இப்போது
வரும் புதிய புதிய தொழில்நுட்ப சாதனங்கள் மனதர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில்
இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக புதிய தொழில்நுட்ப கருவிகள்
மனிதர்களின் வேலையை மிகவும் சுலபமாக்கி வருகின்றன, மேலும் எளிமையாக இந்த கருவிகள்
வேலைகளை செய்கின்றன.
இந்த
மாதத்தின் மொத்த மழை பொழிவில் 64சதவிகிதம் முதல் ஐந்து நாட்களிலேயே கொட்டி
தீர்த்துள்ளது. மேலும் இதன் காரணமாக தென் மும்பை பகுதிகளில் பெரும் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. சாண்டாக்ரூஸ் பகுதியில் 162.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்குப் பருவமுழை துவங்கி கடந்த 2மாதங்களாக நாடு முழுவதும் பெய்து கொண்டு இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட சில இடங்களில் நிலச்சரிவு போன்ற பதிப்புகளும் அதிகமாக உள்ளது. குறிப்பாக செய்திகளில் கடந்த 24மணி நேரத்தில் இங்கு 500மல்லி மீட்டர் மழை அங்கு 300மில்லி மீட்டர் மழை என்று கூறி கேட்டு இருப்போம். இது எவ்வாறு அளவிடப்படுகிறது என்பது குறித்த காணலாம்.
அதாவது
வானிலை ஆராய்ச்சி மையங்களில் Rain gauge என்று அழைக்கப்படும் மழை மானி கருவி
இருக்கும் இதைப் பயன்படுத்தி தான் மழையை அளந்து மி.மீ மழை பெய்தது என்று சரியாக
சொல்கிறார்கள்.
இதைப்
பயன்படுத்தி 24மணிநேர கால அளவில் ஒது சதுர மீட்டருக்கு எவ்வளவு மழை
பொழிந்திருக்கிறது என்பதை அறிவார்கள், அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில்
எவ்வளவு மழை பெய்தது என்று சரியாக கண்கிடுவார்கள்.
குறிப்பிட்டு
சொல்ல வேண்டும் என்றால் ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு
1லிட்டர் என்பதற்கு சமம். எனவே 10மிமீ என்று பதிவானல், அதனை 10லிட்டர்/சதுர
மீட்டர் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் தற்போது பல வகையான தானியாங்கி மழை
மானிகள் சந்தையில் கிடைக்கின்றன. அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மழை அளவை
குறித்து தகவலை வழங்கவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக