இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க முக்கியக் காரணம் யூபிஐ செயலியின் அறிமுகம் தான். வேலெட் சேவையில் இருந்து நேரடி வங்கிக் கணக்குப் பரிமாற்றம் என்பது மக்கள் மத்தியில் டிஜிட்டல் பரிமாற்றம் மீதான நம்பிக்கையை அதிகரிது பயன்பாட்டு அளவையும் அதிகரித்தது. இதன் வாயிலாகவே இன்று இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற துறையில் புதிய உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் யூபிஐ தளத்தில் அடுத்தடுத்து புதிய சேவைகளை அறிமுகம் செய்யவும், ஒட்டுமொத்த டிஜிட்டல் பேமெண்ட் தளத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் முக்கியமான திட்டங்களில் தற்போது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா பணியாற்றி வருகிறது. புதிய சேவைகள் NPCI என அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா தற்போது யூபிஐ டூ பேமெண்ட் வேலெட், ஆட்டோபே சேவை, வாட்ஸ்அப் இணைப்பு, கடன் சேவைகள், NFC எனப்படும் near-field communication பேமெண்ட் முறை ஆகியவற்றை அறிமுகம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. முக்கிய நிறுவனங்கள் தற்போது கூகிள் பே மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்கள் தங்களது யூபிஐ செயலியின் மூலம் ஆட்டோபே சேவையை அறிமுகம் செய்ய நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இதனால் இந்தப் புதிய ஆட்டோ பேமெண்ட் சேவை அடுத்த சில மாதங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல் கிடைத்துள்ளது பயன்பாடு இந்த ஆட்டோபேமெண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட்டால் மக்கள் தங்களின் மின்சாரக் கட்டணம், மொபைல் பில், ஈஎம்ஐ, மீடியா கணக்குகளுக்கான ரீசார்ஜ், இன்சூரன்ஸ் ப்ரீமியம் ஆகியவற்றைத் தானாகச் செலுத்திக்கொள்ளும் வசதிகள் கிடைக்கும் இது கிட்டத்தட்ட கிரெடிட் கார்டு, ஹோம் லோன் ஆகியவற்றின் ஆட்டோ டெபிட் சேவை போன்றது தான். ஆனால் இது அனைத்தும் யூபிஐ செயலியில் என்பது புதுமை. NFC சேவை வெளிநாடுகளில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள NFC பேமெண்ட் சேவையை இந்தியாவிலும் கொண்டு வர நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா முடிவு செய்து அதற்கான பணிகளைக் கடந்த சில மாதங்களாகவே செய்து வருகிறது. இச்சேவையை அறிமுகம் செய்யும் முன் அதற்கான தளத்தைச் சந்தையில் உருவாக்க வேண்டும் என்பதற்காக NPCI பேமெண்ட் தளத்தில் இருக்கும் நிறுவனங்கள் புதிய பாயின்ட் ஆப் சேல்ஸ் இயந்திரத்தை NFC சேவை பயன்படுத்தும் திறன் கொண்டதாக மாற்ற அறிவுறுத்தியுள்ளது 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் NPCI தற்போது பணியாற்றி வரும் முக்கியமான சேவைகளில் ஒன்று வாட்ஸ்அப் இணைப்பு, இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ்அப் உடன் யூபிஐ செயலியை இணைப்பதன் மூலமும், அடுத்தடுத்த புதிய திட்டங்களை அறிமுகம் செய்யப்படுவதாலும், இந்திய பேமெண்ட் சந்தைக்குள்ள புதிய 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைந்த காலகட்டத்தில் இணைய வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக