Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மீது சொத்து குவிப்பு புகார்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

ஏன் மாற்றப்பட்டார் பீலா ராஜேஷ் ...

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீதான சொத்துக்குவிப்பு புகாரை விசாரணை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

நீட்டிக்கப்பட்டு வரும் பொது முடக்கம், கட்டுப்படுத்தப்பட்ட தளர்வுகள் என எதையெதையோ செய்தாலும் கட்டுக்குள் அடங்க மறுக்கும் கொரோனாவை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி வருகின்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் அரசுகள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சமயத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ்.

கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்றி செய்து வந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். கொரோனா தொற்று தொடர்பான விவரங்களை தினமும் மீடியாக்களிடம் மாலை நேரத்தில் விளக்கி தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி வந்தார். செய்தியாளர்களை பிசுரு தட்டாமல் அவர் கையாண்ட விதம், கொரோனா குறித்து ட்விட்டரில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிப்பது என அவரது சுறுசுறுப்பான நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றன.

இதனிடையே, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வணிக வரித்துறைச் செயலாளராக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருந்த ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாரிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதில்லை, பவர் பாலிட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அவரது பணிமாற்றத்துக்கு காரணாமாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார்கள் எழுப்பப்பட்டு, மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளது. பீலா ராஜேஷ் தனது வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 அதன் தொடர்ச்சியாக, பீலா ராஜேஷ் மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அவர் மீதான புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்துக்கு மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக