Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

ஒரே பிளான் வருஷம் முழுக்க ஜாலி; BSNL ரூ.1499 ப்ரீபெயிட் பிளான் அறிமுகம்!


பிஎஸ்என்எல் ரூ.1499 க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது செப்டம்பர் 1, 2020 முதல் வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கும்.

பி.எஸ்.என்.எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்காக பி.வி -1499 என்கிற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சென்னை ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக இந்த திட்டத்தை அறிவித்தது. புதிய பி.வி -1499 திட்டமானது செப்டம்பர் 1, 2020 முதல் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பிவி -1499 திட்டத்தின் நன்மைகள்!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய பிவி -1499 திட்டமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 24 ஜிபி அளவிலான எஃப்யூபி டேட்டாவுடன் வருகிறது. நன்மைகளை தவிர்த்து, இது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்கும்.

குரல் அழைப்பு நன்மையானது ஒவ்வொரு நாளும் 250 நிமிடங்களுக்கு என்கிற FUP வரம்பைக் கொண்டுள்ளது. அதன்பிறகு, வாடிக்கையாளர் குரல் அழைப்புகளைச் செய்வதற்கு நிலையான கட்டணத்தின் கீழ் செலவீனங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் இலவசமாக வழங்குகிறது.

இது ஒரு விளம்பர சலுகையாக அறிமுகமாகி உள்ளதால், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் 90 நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதல் செல்லுபடியை பெறுவார்கள்.
வழக்கமாக இந்த பிவி -1499 திட்டமானது 365 நாட்கள் (1 வருடம்) என்கிற செல்லுபடியை கொண்டுள்ளது. அதுவே விளம்பர சலுகையுடன், இந்த திட்டத்தின் அசல் செல்லுபடியாகும் தன்மை 30 நாட்கள் நீட்டிக்கப்படும். எனவே திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் தன்மை 395 நாட்களாக மாறும்.

வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் வலைத்தளத்திலிருந்து பெறலாம் அல்லது பதிவுசெய்யப்பட்ட பிஎஸ்என்எல் எண்ணிலிருந்து ‘PLAN BSNL1499' என்கிற மெசேஜை 123 என்கிற எண்ணுக்கு
அனுப்பலாம்.

பி.வி -365 திட்டத்தை கருத்தில் கொள்ளலாம்!

ரூ.1499 என்பது பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் லேட்டஸ்ட் ஒரு வருட பிளான் ஆகும். நீங்கள் வேறு விருப்பங்களை தேடுகிறீர்கள் என்றால், பி.வி -365 திட்டத்தை கருத்தில் கொள்ளலாம். இது 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்தத் திட்டம் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா, டேட்டா தீர்ந்த பிறகு 80 கே.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் இணைய சேவை, தினமும் 250 நிமிட வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது.

இந்த திட்டத்தைப் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்,மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து இலவசங்களும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். எனவே முதல் 60 நாட்கள் கிடைக்கும் இலவச சேவையின் பின்னர், அழைப்புகளைச் செய்ய அல்லது டேட்டா பயன்படுத்த, வாடிக்கையாளர் மற்ற வாய்ஸ் மற்றும் டேட்டா வவுச்சர்களை வாங்க வேண்டும்.

இப்போது 15 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது!

மிகவும் சமீபத்தில் இந்த டெலிகாம் நிறுவனம் தனது ஃபைபர்-டு-ஹோம் (FTTH) வாடிக்கையாளர்களுக்கான கட்டண வசூல் தேதி குறித்த திருத்தத்தை அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.


முன்னதாக FTTH வாடிக்கையாளர்களுக்கு விலைப்பட்டியல் தேதியிலிருந்து பணம் செலுத்துவதற்கு 21 நாட்கள் கிடைத்தன, ஆனால் அது இப்போது 15 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர் முதல் 15 நாட்களில் கட்டாயமாக பில் செலுத்த வேண்டும் என்று அர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக