Lava நிறுவனம் தனது இசட் தொடரின் கீழ் அடுத்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. லாவா இசட் 93 பிளஸ் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருப்பது அதன் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன்
இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் அறிவிக்கப்படவில்லை. இப்போது பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
லாவா இசட் 93 பிளஸ்
லாவா இசட் 93 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு வண்ணங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய லாவா இசட் 93 ஸ்மார்ட்போன், 6.53' இன்ச் 1560 x 720 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2.0GHz ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 2 ஜிபி / 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 9.0 பை
ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் இயங்குகிறது, மேலும் இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. போனின் பின்புறத்தில், 16 மெகாபிக்சல் கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியின் பின் பேனலில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது.
லாவா இசட் 93 ஸ்மார்ட்போன்
இணைப்பு வசதி
இதில் 4 ஜி வோல்டிஇ, டூயல் சிம், ப்ளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி / என், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. லாவா இசட் 93 ஸ்மார்ட்போன் 163.2 மிமீ x 77.8 மிமீ x 8.9 மிமீ அளவிடும், 186 கிராம் எடையை கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக